யேகோவா-யீரே (முதலாம் பாகம்) 64-04-02 லூயிஸ்வில்,மிசிசிப்பி,அமெரிக்கா வில்லியம் மரியன் பிரன்ஹாம் அமரலாம். இன்றிரவு மீண்டும் வருவதற்கு இது ஒரு மகத்தான சிலாக்கியமாயுள்ளது. வந்து நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப் பற்றி உங்களுடன் பேசுவது என்பது எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதமா யிருக்கிறது, உங்களில் அநேகர் அவரை அறிந்திருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் அல்லது நான் நம்புகிறேன், உங்கள் பாவங்களை மன்னித்ததிலும், உங்களுக்காக கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின் வழியிலும் நீங்கள் அவரை அறிந்திருப்பீர்கள் என்று. இன்றிரவு அவர்தாமே தன்னுடைய கிருபையை உங்களுக்கு இன்னும் அதிகமாக வழங்குவாராக. இங்கிருந்து நாம் செல்கையில், "வழியிலே அவர் நம்முடனே பேசும்போது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா", என்று எம்மாவூரிலிருந்து வந்தவர்கள் கூறியதைப்போன்று, நாமும் கூறும்படி இருப்பதாக. 2. இப்போது, ஒவ்வொரு காலைவேளையிலும், அவரை போன்ற ஒரு - ஒரு -ஒரு - ஒரு மக்கள் தொடர்பு மனிதனை (public relation man) அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இங்கிருக்கும் திரு. வெயில், கேள்விகளுக்கு பதில் தந்து, வேதாகமத்திலிருந்து விளக்கி காண்பித்து ஒரு - ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். அது இங்கே இந்தக் கட்டிடத்தில் தானே? காலை வேளையில், சரியாக இந்தக் கட்டிடத்தில் தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். யாருக்கு நேரம் கிடைத்தாலும், சில ஊழியக்காரர்களோ, அல்லது மற்றவர்களோ வர விரும்பினால், ஏன், யாராயிருந்தாலும் நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள். சகோதரன் வெயில் ஆழமான ஞானமுள்ள ஒரு போதகர் (profound teacher). நிஜமாகவே, அவர் நல்ல கல்வியறிவைப் (education) பெற்றிருக்கிறார். 3. ஆகையால், எனக்கு கல்வியறிவு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் - நான் விரும்புவதாக அன்றொரு நாள் நான் கூறினேன். உங்களுக்கு தெரியும். விளக்கி காண்பிப்பதற்கு, மற்றவற்றுடன் ஒத்துப்போகும் உவமைகளை நான் பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது. அதை விளக்கி காண்பிப்பதற்கு போதுமான கல்வியறிவு எனக்கில்லை. ஆனால் எப்படியோ, அல்லது, ஏதோவொரு விதத்தில், அதை செய்யும்படியாக கர்த்தர் எனக்கு உதவி செய்கிறார். 4. எனவே நான் நினைவுகூறுகிறேன், ஒருமுறை வேதாகமத்தில் ஒரு-ஒரு மனிதன் இருந்தான், அவனுடைய பெயர் யோவான், அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியன். வழக்கமாக, அவர்களுடைய அப்பா என்ன செய்தாரோ அதைதான் அவர்களும் பின்தொடர்ந்து செய்தார்கள். ஆனால் அவனோ உண்மையான ஒரு செய்தியை கொண்டு இருந்தான்; அவன் மேசியாவை அறிவிக்க வேண்டிய வனாயிருந்தான். இப்போது, அவனுடைய அப்பா சென்ற பள்ளிக்கூடத்திற்கு அவன் சென்றிருந்தால், அவர்கள், "இப்பொழுது, இங்கிருக்கும் அருமை சகோதரன் இன்னார் இன்னார் அவர்களை தெரியுமா, அவர்தான் அந்த மேசியா" என்று கூறி, அவர்கள் கிட்டத்தட்ட அவனையும் நம்ப வைத்திருப்பார்கள். எனவே, பாருங்கள், அந்த விதமான எந்தவொரு பள்ளிக்கூடத்திற்கும் அவன் செல்லவில்லை. 5. அவன் வனாந்திரத்திற்குள் சென்றான், அவன் அங்கே தேவனால் போதிக்கப்பட்டான் (learned of God). வெளியே வந்த அவனுடைய செய்திகளை நீங்கள் கவனித்தீர்களா? அவன் ஒருபோதும் கல்வியறிவு பெற்றிருந்ததே கிடை யாது. ஒன்பது வயதில் அவன் உள்ளே சென்று, முப்பது வயதில் வெளியே வந்து, ஆறு மாதங்கள் பிரசங்கித்து, பின்பு கொலை செய்யப்பட்டான். இப்போது அவன் உபயோகித்த... நாம் காண்கிறோம், கூறினான், உதாரணத்திற்கு பரிசேயர்களும், சதுசேயர்களும் புறப்பட்டு வந்த போது, அவன், "ஓ, பாம்புகளின் குட்டிகளே!" என்றான். அதைத்தான் அவன் வனாந்திரத்தில் கண்டிருந்தான்; அசுத்த மான, வழவழப்பான, வஞ்சிக்கிறதான பாம்புகளை தான் கண்டிருந்தான். பாருங்கள்? 6. இப்போது, வேறு யாராவதாக இருந்திருந்தால், "ஏன், சிறு அற்பமான தொந்தரவுகளே" என்றோ அல்லது வேறு ஏதாவதொன்றையோ கூறியிருந்திருப்பார்கள். ஆனால் அவனோ... 7. ஆனால், பாருங்கள், உபயோகப்படுத்துவதற்கு அவனுக்கு எந்த வார்த்தையும் தெரிந்திருக்கவில்லை, எனவே அவன், "பாம்புகளின் குட்டிகளே" என்று அப்படியே கூறினான், அதைத்தான் அவன் வனாந்திரத்தில் கண்டிருந்தான். "வருங்கோபத்துக்கு தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 'எங்களிடம் இருக்கிறது, நாங்கள் இதை சேர்ந்தவர்கள், அதை சேர்ந்தவர்கள், என்று சொல்ல ஆரம்பிக்காதீர்கள், 'ஏனெனில் தேவன் இந்த கல்லுகளினாலே," அதைத்தான் அவன் கண்டிருந்தான், "ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார், கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைத்திருக்கிறது" என்றான். ஒரு கெட்ட மரத்தை என்ன செய்யவேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். கெட்ட மரத்தை எரிக்கும்படியாக "நல்ல கனிகொடாத எவரும் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படுவார்கள்". 8. பாருங்கள், அவனுடைய எல்லா செய்தியும் இயற்கையோடு ஏதோவொருவிதத்தில் சம்மந்தப்பட்டவைகளாய் இருந்தன, அவன் அதை மாதிரியாக (patterned) கொண்டிருந்தான். சாதாரண ஜனங்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். பின்பு அவர்கள்... ஜனங்கள் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொள்ளும் இந்த பெரிய வார்த்தைகளை காட்டிலும் அவ்வாறு செய்வதே சற்று சிறந்ததாயிருக்கிறது என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. 9. இப்போது, கடந்த இரவு நாங்கள் சற்று தாமதித்து விட்டோம், ஆகவே, இன்றிரவு, எங்களால் முடிந்தவரை, உங்களை சரியான நேரத்திற்கு அனுப்பிவிட முயற்சிக்கி றோம். மேலும், இன்றிரவு, இந்த தகர கூரையின் மீது, மழையானது மிக மோசமாக பெய்யும்படி கர்த்தர் அனுமதிக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன், எனவே நாம் விசுவாசிக்க மட்டும் செய்து மேலும் - மேலும் நம்முடைய அறிவுக்கு எட்டிய சிறந்த விதத்தில் அவருக்கு சேவை செய்ய முயற்சிப்போம். 10. இப்போது தேவனுடைய வார்த்தையை நாம் வாசிக்கையில், ஆதியாகமம் புஸ்தகத்திலிருந்து இப்போது நாம் வாசிக்கையில், நாம் எழுந்து நிற்கலாம். நாம் 22-ம் அதிகாரம், 7-ம் வசனத்திலிருந்து தொடங்கி, 14-வரை வாசிக்கலாம். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி... அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவன்மீது ஒன்றும்... போடாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பார்த்ததால்... பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிப்பெயர்ப்பு] ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் போது, இதோ, பின்னாக அந்த புதரிலே அந்த கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத்... தகன-பலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 11. நம்முடைய தலைகளை நாம் ஒரு நிமிடம் தாழ்த்தி, ஜெபிக்கலாம். 12. எங்கள் பரலோக பிதாவே, "விசுவாசம் கேள்வியினாலே வரும், தேவனுடைய வார்த்தையை கேட்பதாலே வரும்" என்று தேவனாயிருக்கிற இந்த வார்த்தையின் மூலம் எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது, பிதாவே, தேவனுடைய அழைப்புக்கு கீழ்படிகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அதை நிராகரிப்பவர்களோ சபிக்கப்பட்டவர்கள் என்பதை நாங்கள் காணும்படியாக, பழைய ஏற்பாட்டில் நடந்த எல்லா காரியங்களுமே திருஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டன என்று வேதாகமத்தின் மூலம் எங்களுக்கு சொல்லப்பட்ட விதமாகவே, நாங்கள் இதை கற்றுக்கொள்ளும்படியாக, வாசிக்கப்பட்ட இதனுடைய பின்னணிப் பொருளை (context) நீர் எங்களுக்கு வழங்க வேண்டுமென்று (impart) நாங்கள் ஜெபிக்கிறோம். ஆகவே, பிதாவே, இன்றிரவு, வெளிப்பாட்டின் மூலம் எங்களுக்கு புரிந்துக்கொள்ளுதல் இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த நாளில் எங்களை குறித்ததான காரியங்களை, பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்துவாராக, இது எல்லாமே தேவனுடைய இந்த மகத்தான பரம இரகசியத்தில் உலகமுண்டானது முதலே மறைக்கப்பட்டிருக்கிறது. இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 13. கர்த்தருக்கு சித்தமானால், யேகோவா-யீரே என்ற பொருளின் பேரில், நான் அந்த தலைப்பில் பேச விரும்பு கிறேன். "தேவன் தமக்கான பலியை பார்த்துக் கொள்வார்" என்பதே அந்த வார்த்தைக்கான அர்த்தம். 14. நாம் ஆபிரகாமைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்ப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் இது நடந்தது. இதைப் பற்றின உண்மையான சத்தியத்தை பெற்றுக்கொள்ள, நாம் பின்னோக்கி செல்லலாம். இது 22-ம் அதிகாரத்தில் நடந்தது. நாம் இதற்கு முன்பு நடந்ததைப் பார்க்க விரும்புகிறோம்; கூடுமானால், நான் சுட்டிக்காட்டும்படி, இங்கே சில வேத வாக்கியங்களை நான் எழுதி வைத்திருக்கிறேன். நான் அவற்றிலிருந்து பேச விரும்புகிறேன், மேலும் நான் 12-ம் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். ஆபிரகாம் என்கின்ற இந்த நபர் யார் என்றும், இப்போது தேவன் எவ்வாறு - எவ்வாறு இவனை தெரிந்து கொண்டார் என்பதையும் கண்டறியும்படியாக நாம் பின்னோக்கி செல்லலாம். 15. வாக்குத்தத்தமானது ஆபிரகாமுக்கும் அவனுக்கு பின்வரும் அவனுடைய வித்திற்கும் கொடுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம், ஆபிரகாமுக்குள் இருப்பதால் மாத்திரமே அவனோடு கூட நாமும் அந்த வாக்குத்தத்தத்திற்கு சுதந்தரவாளிகளாயிருக்கிறோம். இப்போது ஆபிரகாமுக்கு வித்து இருந்தது, மேலும் அந்த வித்து, நிச்சயமாக, அவனிடம் அநேக வித்து, வித்துக்கள் இருந்தன, ஆனால் அவனிடமிருந்த அந்த ஒரு வித்துக்குதான் அந்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. அவன் இஸ்மவேலைப் பெற்றிருந்தான்; அதன்பின் சாராள் மரித்த பிறகு, அவன் வேறொரு பெண்ணை விவாகம் செய்து, மகள்களை தவிர ஏழு குமாரர்களை பெற்றிருந்தான்; அவர்கள் எல்லாருமே ஆபிரகாமின் வித்துதான், ஆனால் அந்த... ஆபிரகாமின் வித்துக்கள்தான், ஆனால் அந்த ஒரே வித்து தான் வாக்குத்தத்தத்தை பெற்றிருந்தது. உண்மையாகவே அந்த வித்து எதுவென்றால், அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மீது ஆபிரகாம் கொண்டிருந்த அவனுடைய விசுவாசமே. 16. இப்போது ஆபிரகாமை, நாம் காண்கிறோம், நாம்...நாம் அவனை இங்கே 12-ம் அதிகாரத்தில் காணும் வரை அவன் காட்சியிலேயே இல்லை. ஆதியாகமம் 11-ம் அதிகாரத்தில், அவனுடைய அப்பா பாபிலோனிலிருந்து வந்ததை நாம் கண்டறிகிறோம். உங்களையும் அல்லது என்னையும் போல, அல்லது மற்ற எவரைப் போலவும், ஆபிரகாமும் வெறும் ஒரு சராசரி மனிதனாயிருந்தான். நாம் எண்ணுவதைப் போல, அவன் வயதான மனிதனாகிக் கொண்டிருந்தான். அவனுக்கு எழுபத்தைந்து வயது. அவன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்திருந்தான். அவளுடைய பெயர் சாராள். நிச்சயமாக, அப்போது அவனுடைய பெயர் ஆபிரகாம் (Abraham, ஆபிரஹாம்] அல்ல, அது ஆபிராமாயிருந்தது (Abram). அவளுடைய பெயர் சாராய் (Sarai). அவனை விட அவளுக்கு பத்து வயது குறைவாக இருந்தது என்பதை நாம் காண்கிறோம், அதனால் அவளுக்கு அறுபத்தைந்து வயதும், அவனுக்கு எழுபத்தைந்து வயதுமாயிருந்தது. 17. அவர்கள் அநேகமாக, அவன் ஒரு விவசாயியாக, சிநெயார் பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டிருந்தான், ஒரு சராசரி வாழ்கையையே வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் -அவன் அநேகமாக பகல் நேரங்களில் வெளியே சென்று, அவனுக்கான இறைச்சியை புதர்களில் இருந்து பெற்றுக் கொண்டு, பெர்ரிக்களை (berries) பறித்து, அவ்விதமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தான். சாதாரண ஒரு சராசரி மனிதன், அவனைப் பற்றி விசேஷித்தது (special) என்று எதுவுமே இல்லை. ஆனால் ஒரு நாள், தேவன் அவனை அழைத்தார். தேவன் அந்த அழைப்பை ஏற்படுத்தியபோது, அதுதான் அந்த வித்தியாசத்தை உண்டாக்கியது. 18. எந்தவொரு வாழ்க்கையிலும் அது அவ்வாறுதான் நடக்கிறது. அதற்கு தேவன் தேவையாயிருக்கிறார். அது நீ என்ன செய்கிறாய் என்பதல்ல; அது தேவன் என்ன செய்கி றார் என்பதாயிருக்கிறது. பாருங்கள்? "நான் தேவனை தேடினேன். நான் தேவனை தேடினேன்", என்று நீ கூறலாம். நீ தவறாக புரிந்துகொண்டாய். எந்த மனுஷனும் தேவனை தேடுவதில்லை. தேவன் மனுஷனை தேடுகிறார். பாருங்கள்? அது நீ தேவனை தேடுவதல்ல; அது தேவன் உன்னை தேடுவதாயிருக்கிறது. 19. இயேசு, "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, ஆனால் நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்" என்றார். பாருங்கள்? ஆகவே உலகத் தோற்றத்திற்கு முன்னரே நீ தெரிந்து கொள்ளப்பட்டாய், அல்லது நீ தெரிந்துகொள்ளப்படவே இல்லை. அந்த பெயரை மீட்பதற்காக மட்டுமே அவர் வந்தார். அந்த ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் யாருடைய பெயர்களெல்லாம் இல்லையோ... உலகத் தோற்றத்திற்கு முன்பாக, என்னவாயினும், அவர்கள் மட்டும்தான் அங்கே இருக்க போகிறார்கள். பாருங்கள்? உலகத்தோற்றத்திற்குமுன்னே நீ அவருக்குள் தெரிந்து கொள்ளப்பட்டாய். உலகத் தோற்றத்திற்குமுன்னே, ஆட்டுக் குட்டியானவர் தெரிந்து கொள்ளப்பட்டபோது, அப்போதே நீயும் அவருடன்கூட தெரிந்து கொள்ளப்பட்டாய். 20. சென்ற இரவு நான் கூறியதைப் போன்று, நீ தேவனுடைய சிந்தனையின் ஒரு தன்மையாயிருக்கிறாய் (attribute). பாருங்கள், நீங்கள் நித்தியமாக இருப்பதற்கு அதுமட்டும்தான் ஒரே வழி. மேலும் நித்திய ஜீவனின் ஒரே ஒரு வடிவம். நித்திய ஜீவன் ஒரே ஒரு வடிவத்தில்தான் இருக்கிறது, அது தேவனே. எனவே, அதுதான் எல்லாமே, அவர் ஒருவர்தான் நித்தியமானவராயிருக்கிறார். 21. இப்போது ஆபிரகாமுக்கு அந்த இடமிருந்தது என் பதை நாம் காண்கிறோம். தேவன், தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை காண்பிக்க, பழைய ஏற்பாட்டில், மாதிரிகளை கொண்டும் நிழலாட்டங்களை கொண்டும் கிரியை செய்தார். 22. தேவன் அவனோடு பேசினார் என்பதை இப்போது நாம் இங்கே காண்கிறோம். தேவன் அவனை அழைத்த பிறகு, மகத்தான காரியம் என்னவென்றால்... தேவன் அழைத்த அந்த அழைப்பு ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அழைப்பாயிருந்தது (a supernatural call). ஆனால், அப்படியிருந்தபோதும், அது ஒருபோதும் எந்த நேரத்திலும் ஆபிரகாமை தடுமாற செய்யவே இல்லை. அது தேவன் என்பதை அவன் எப்போதுமே அறிந்திருந்தான். அதுதான் மகத்தான காரியம். எப்போது... 23. தேவனுடைய அழைப்புகள் இயற்கைக்கு மேம்பட்ட வைகளாயிருக்கின்றன; அதில் ஒன்றுமே இயற்கைக்குட்பட்டவைகளல்ல. தேவன் இயற்கைக்கு மேம்பட்டதை எடுத்து, இயற்கைக்குட்பட்டதில் கிரியை செய்ய வைக் கிறார், ஆனால் தேவனுடைய அழைப்புகள் இயற்கைக்கு மேம்பட்டவை களாயிருக்கின்றன. "வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே இருக்கின்றன" என்று வேதாகமம் கூறுகின்றது. பாருங்கள், அது தேவன் மூலமாக -மூலமாக முன்குறிக்கப்பட்டிருக்கிறது. 24. இதில், நாம் காண்கிறோம், அதாவது ஆபிரகாம் அழைக்கப்படுகையில், அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டான், ஏறக்குறைய முற்றிலும் சாத்தியமே இல்லாத ஏதோவொன்றை அவர் அவனிடம் கூறினார். அவன் எழுபத்தி - ஐந்து வயதானவனாயிருந்தான், அவனுடைய மனைவி அறுபத்தி - ஐந்து வயதானவளாக இருந்தாள், அவளுக்கு அது மாதவிடாய் முடிந்து சுமார் இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதாக இருந்தது, அவள் ஒரு இளம் பெண்ணாக இருந்தது முதற்கொண்டு அவளோடு வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. ஆனாலும், அப்படியாக இருந்தபோதும், அவர்கள் ஒரு குழந்தையைப் பெறப் போகிறார்கள் என்றும், மேலும் இந்த குழந்தையின் மூலமாக முழு உலகமும், சகல ஜாதிகளும் (nations) ஆசீர்வதிக்கப்படும் என்றும் அவனிடம் கூறினார். இப்போது அது ஒரு விசித்திரமான விஷயமாயிருக்கிறது. 25. "மேலும் ஆபிரகாம்," "தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்", என்று வேதாகமம் ரோமர் 4-ம் அதிகாரத்தில் கூறுகிறது, 26. என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது, முதல் மாதம் சென்ற பிறகு... நிச்சயமாக, நான் கூறியதைப் போன்று, சாராளுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. முதல் மாதத்தில், என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, ஆபிரகாம், "சாராள், தேனே, நீ எப்படி உணருகிறாய்" என்றான். "எந்த மாற்றமும் இல்லை." 27. "நல்லது, எப்படியிருந்தாலும், தேவனுக்கு ஸ்தோத்திரம் நாம் குழந்தையை பெறப்போகிறோம். நாம் அதை நிச்சயமாக பெறப்போகிறோம். நாம் பெறுவோம் என்று தேவன் கூறியிருக்கிறார்." 28. சாராள், அந்த சிறு குழந்தைகாலணிகளைப் (booties) பின்னினாள், பருத்தித்துணிகளையும் ஊசிகளையும் மற்றும் ஒவ்வொன்றையும் வாங்கி; ஆயத்தமானாள், குழந்தைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள், 'ஏனெனில் அவள் குழந்தையைப்பெறப்போகிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். தேவன் அப்படிதான் கூறியிருக்கிறார். பாருங்கள்? 29. முதல் வருடம் கடந்துவிட்டது. "தேனே, நீ ஏதும் வித்தியாசமாக உணருகிறாயா?" "எந்தவொரு வித்தியாசமுமே இல்லை." 30. "தேவனுக்கு ஸ்தோத்திரம்! முதல் முறையைவிட அது இப்போது ஒரு மகத்தான அற்புதமாயிருக்கும். பார், ஒரு வருடம் கடந்துவிட்டது. எப்படியிருந்தாலும், அதை பெறப்போகிறோம்." ஏன்? தேவன் அப்படிதான் கூறியிருக்கிறார். அதுவே எல்லா கேள்விகளையும் தீர்த்துவைக்கிறது. தேவன் அப்படிதான் கூறியிருக்கிறார். நாம்... தேவன் அப்படிதான் கூறியிருக்கிறார். 31. பத்து வருடங்கள் கடந்துவிட்டது. "தேனே, இப்போது நீ எப்படி உணருகிறாய்?" இப்போது அவளுக்கு எழுபத்தி- ஐந்து வயது, அவனுக்கு எண்பத்தைந்து வயது. 32. இப்போது, அது போன்றதான ஒரு வயதான ஆணும் பெண்ணும் இன்றைக்கு மருத்துவமனைக்கு சென்று, "மருத்துவரே, நாங்கள் ஏற்பாடுகளைச் செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு..." என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 33. மிகவும் முட்டாள்தனமான சில காரியங்களை (most ridiculous things) நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று தேவன் கேட்கிறார், ஆனால் அவர் அதை எப்போதுமே சரியாக்குகிறார். தேவன்... உலகத்தை பொறுத்தமட்டில், தேவனை விசுவாசிக்கும் ஒரு மனிதன், முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கொள்கிறான். 34. எகிப்தியர்களுடைய அந்த - அந்த சகல சாஸ்திரங்களிலும் பயிற்று விக்கப்பட்டிருந்த, அந்த - அந்த - அந்த - அந்த எகிப்திய சேனைகளின் தலைவனாயிருந்த மோசேயை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. இருந்தாலும், அப்படியாக பயிற்றுவிக்கப்பட அவனுக்கு நாற்பது வருடங்கள்ஆனது, அதை அவனுக்குள் கொண்டுவர உலகத்திற்கு என்ன தேவைப்பட்டதோ, அவ்வாறே அந்த கல்வியை அவனை விட்டு எடுத்துப் போட தேவனுக்கும் நாற்பது வருடங்கள் ஆனது. இன்னும் நாற்பது வருடங்களில், அவனுடைய எல்லா பயிற்சியையும் அவனைவிட்டு நீக்கினார், அந்த எல்லா கல்வியையும், தேவபாடத்தையும் (theology) அவனிலிருந்து வெளியே எடுத்துப்போட்டார். அவர் அவனை வனாந்தரத்தின் பின்புறத்திலே சந்தித்தார், அவன் நாற்பது வருடங்களாக புத்தகங்களில் இருந்து கற்று கொண்டதை காட்டிலும், தேவனுடைய பிரசன்னத்தில் ஐந்து நிமிடங்களில், அவன் தேவனை பற்றி அதிகம் அறிந்துகொண்டான். அது உண்மை. 35. கல்வியினால் தேவன் அறியப்படுவதில்லை. அவர் விசுவாசத்தின் மூலமாகவே அறியப்படுகிறார். தேவன் இயற்கைக்குமேம்பட்ட விதத்தில் அவனோடு பேசினார். சில நேரங்களில், என்னே ஒரு முட்டாள்தனமான காரியத்தை (ridiculous), நாம் செய்யும்படியாக தேவன் பண்ணுகிறார். 36. விலகி ஓடுகிற, தேவனை விட்டு விலகி ஓடுகிற ஒரு தீர்க்கதரிசியை, எண்பது வயதான ஒரு முதியவரை, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தேவனுடைய பிரசன்னத்தில் ஐந்து நிமிடங்களில்: அடுத்த நாள் காலையில் (உங்களால் அவனை கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா?), ஒரு வயதான மனுஷன், இந்த விதமாக தாடிமீசைகள் தொங்கிக்கொண்டிருக்க; அவனுடைய வழுக்கை தலை மின்னிக்கொண்டிருக்க; அவனுடைய கையில் ஒரு கோணலான கோலோடு; அவனுடைய மனைவி ஒரு கழுதையின் மேல் இரு கால்களையும் இருபக்கமும் போட்டபடி, அவளுடைய இடுப்பில் பிள்ளையை தூக்கிக்கொண்டு அமர்ந்தபடி; வழியிலே சென்றார்கள்! "மோசே, நீ எங்கே போகிறாய்?""எகிப்தை கைப்பற்ற சென்றுகொண்டிருக்கிறேன்." 37. பாருங்கள், "கைப்பற்ற," ஒரு தனி மனிதனின் படையெடுப்பு. அது கேட்பதற்கு கேலிக்குரிய செய்தியாய் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றின காரியம் என்ன வென்றால், அவன் அதை செய்துவிட்டான், ஏனெனில் தேவன் அப்படிதான் கூறியிருந்தார். அதுவே அதைப் பற்றின எல்லா கேள்வியையும் தீர்த்துவைக்கிறது. 38. தேவன் அவ்விதம் கூறியிருக்கும்போது, அதற்கு மேல் ஒன்றுமே இல்லை. அது - அது தான் இறுதி. தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தால், உங்களுடைய ஆத்துமாவை முழுவதுமாக அதின் மீதே பற்றியிருக்கும்படி செய்யுங்கள். உங்களால் விசுவாசிக்க முடிந்தால், முழுவதுமாக பற்றியிருக்க செய்யுங்கள் உங்களுடைய... நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், அதை விட்டு விலகியிருங்கள்; அது உங்களை பாதித்துவிடும். ஆனால் நீங்கள் அதை விசுவாசித்தால், அதோடு தரித்திருங்கள், இந்த உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது உங்களை ஜெயத்திற்கு கொண்டு செல்லும். 39. இப்போது நாம் பார்க்கிறோம், அதாவது, "ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து தடுமாறவே இல்லை." அவனுக்கு நூறு வயதான போது, அவளுக்கு தொண்ணூறு வயது, அவன் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது; இப்போது அவனால் சரியாக கூட பேச முடியவில்லை, அவனுக்கு மிகவும் வயதாகி பலவீனமாகிக் கொண்டிருக்கிறான், "நல்லது, சாராள், அன்பே, நீ எப்படி உணருகிறாய்?" "நல்லது, அன்பே, நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை." (சகோதரன் பிரன்ஹாம் வயதானவர்கள் பேசுவதைப்போல பேசி காண்பிக்கிறார்] 40. "அல்லேலூயா! எப்படியிருந்தாலும், நாம் - நாம் அதைப் பெறப்போகிறோம். தேவன் அப்படிதான் கூறி இருக்கிறார், அதற்கு மேல் வேறொன்றுமே இல்லை. தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்." "தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்பதில் நான் முழு நிச்சயமாக இருக்கிறேன்" என்று அவன் கூறினான். 41. மேலும் இப்போது நம்மை நாமே ஆபிரகாமின் வித்து என்று, அவனுடைய இராஜரீக வித்து என்று (ஈசாக்கினுடைய வித்தல்ல), அவனுடைய இராஜரீக வித்தாகிய, கிறிஸ்துவினுடையவர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம்; ஆனால் எந்த வாக்குத்தத்தமானாலும் தடுமாறுகிறோம், அதோடு தர்க்கம்பண்ணி, அது அப்படி இல்லை என்று கூறி, நம்முடைய சிந்தனைகளில் அதை குறித்து சந்தேகப்படுகிறோம்? நம்மில் அந்தவிதமான எண்ணத்தை நாம் கொண்டிருக்கும்போது நாம் ஆபிரகாமின் வித்து தானா என்று நான் சந்தேகப்படுகிறேன். ஆபிரகாமின் வித்து எதிலுமே தடுமாறாது. அது இல்லாதவைகளை இருப்பவைகளாக அழைக்கும், ஏனெனில் தேவன் அவ்விதம்தான் கூறியிருக்கிறார். அவர் சிருஷ்டிகர். அவரால் அதை அப்படியே சிருஷ்டிக்க முடியும். அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், எனவே அதுவே அதை தீர்த்துவைக்கிறது. அதற்கு மேல் வேறொன்றுமே இல்லை. தேவன் அதை கூறும்போது, அதுவே முழு காரியத்தையும் தீர்த்து வைக்கிறது. இப்பொழுது, நினைவில்கொள்ளுங்கள், அவர் அதை விரும்பினார்... அங்கே இல்லை... அவர் கூறினார்... 42. அவன் செய்யும்படியாக வேறொரு காரியத்தையும் அவர் கூறினார், இப்போது அவன் தன்னைத்தானே தன்னுடைய இனத்திலிருந்தும் தன்னுடைய எல்லா ஜனங்களில் ருந்தும் வேறுபிரித்துக்கொள்ள வேண்டுமென்று கூறினார். 43. தேவன், ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ, சிறு பையனோ அல்லது சிறுமியோ அவருக்கு கீழ்ப்படியும் பொருட்டு, எல்லா அவிசுவாசத்திலிருந்தும் உங்களை நீங்களே வேறுபிரித்துக்கொள்ள வேண்டும், அது சரி, அந்த வார்த்தைக்கு விரோதமாயுள்ள எதிலிருந்தும் நீங்கள் உங்களையே முற்றிலுமாக வேறுபிரித்துக்கொண்டு, அதை விசுவாசிக்கும் வரைக்கும். நீங்கள்... தேவன் ஒரு முற்றிலுமான வேறுபிரிதலுக்கு அழைக்கிறார். 44. இன்றைக்கு ஊழியக்காரர்களை வெளியே அனுப்புகிறதான நம்முடைய பள்ளிக்கூடங்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது. அவைகள் எல்லா விதமான அவிசுவாசத்தினா லும், தாங்களே ஏற்படுத்திக்கொண்ட சில பிரமாணங்களே (creed) இல்லாமல் வேறு வேதவாக்கியமே இல்லை என்கின்ற கோட்பாடுகளின் கருத்துக்களை அவர்களில் திணித்து (in-documate), அதன்பின் அதுபோன்றதான அடிப் படையில் அவர்களை வெளியே அனுப்புகிறது. நாம் ஒரு கூட்ட ஆஸ்வால்டுகளையும், ஜாக் ரூபிக்களையும் மேலும் அது போன்றவர்களையும், தேசம் முழுவதுமாக உருவாக்கி இருக்கிறோம் என்பதில் ஆச்சரிய மொன்றுமில்லை. கம்யூனிஸம் தேசத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது, ஏனெனில் தேவனால் அனுப்பப்பட்ட மறுபடியும் பிறந்த, பரிசுத்த ஆவியினால் நிரம்பிய, அக்கினியினால் பிறந்த தேவனுடைய குமாரர்களுக்கு பதிலாக, தேவனுடைய வார்த்தையானது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியான சத்தியம் என்றும், சத்தியத்தை தவிர அது வேறொன்றுமில்லை என்று விசுவாசிக்கும், கரடுமுரடானவர்களையும், எதனுடைய முகத்திற்கு முன்பாகவும் வாக்குத்தத்தங்களின் மீது நின்று, அதுதான் சத்தியம் என்று அதை முகம் கவிழப் பண்ணுகிற ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு பதிலாக, வேத பாடசாலைகளையும், குஞ்சு பொறிக்கும் இயந்திரத்தில் உற்பத்தியான பிரசங்கிகளையும் நாம் கொண்டிருக்கிறோம். அது தேவனுடைய வார்த்தை! எல்லாம் சரி. [அமெரிக்காவில் 1961-1963-ல் ஜனாதிபதியாயிருந்த ஜான் F கென்னடியை கொன்றவனின் பெயர் - ஆஸ்வால்டு, ஆஸ்வால்டை கொன்றவனின் பெயர் - ஜாக் ரூபி] 45. இப்போது அவர், "உன் இனத்திலிருந்தும், உன்னுடைய எல்லா ஜனங்களிலிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் உன்னை நீ வேறு பிரித்துக்கொண்டு, என்னை பின்பற்றி வா" என்றார். 46. தேவன் தன்னுடைய வழியை மாற்றிக்கொள்ளவே இல்லை. தேவன் மாறாத தேவனாயிருக்கிறார். தேவன், ஒருமுறை எதையேனும் ஒரு வழியில் செய்தாரென்றால், இரண்டாம் முறையும் அவர் அதை அந்த வழியில்தான் செய்யவேண்டும். நினைவில்கொள்ளுங்கள், எந்த காலத்திலாவது நீங்கள் தேவனுடைய செயலை காணும்போது, அவர்... ஒரு மனிதன் இழக்கப்பட்டிருந்தால் - இழக்கப் பட்டிருந்தால், அப்போது அவர் எடுத்த ஏதேனும் குறிப் பிட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை அவர் இரட்சித்திருந்தால், அவர் எப்போதுமே என்றைன்றைக்குமே அந்த அதே தீர்மானத்தோடுதான் இருக்க வேண்டும். அவரால் அதை மாற்ற முடியாது. பாருங்கள்? அவர் முடிவில்லாதவராயிருக்கிறார் (infinite). 47. நாம் முடிவுள்ளவர்களாயிருக்கிறோம் (finite). இன்றைக்கு நான் அறிந்திருப்பதை விட நாளைய தினம் என்னால் அதிகம் அறிந்துக்கொள்ள முடியும். அதே போன்று இந்த வருடம் நீங்கள் அறிந்திருப்பதை காட்டிலும் அடுத்த வருடம் உங்களால் அதிகம் அறிந்துக்கொள்ள முடியும். சென்ற வருடம் நீங்கள் அறிந்திருந்ததை காட்டிலும் இந்த வருடம் நீங்கள் அதிகமானதை அறிந்திருக்கிறீர்கள், ஆனால் தேவனோ அப்படியல்ல. 48. அவர் பரிபூரணமாயிருக்கிறார், எல்லையே இல்லாத வராயிருக்கிறார். அவர் செய்யும் ஒவ்வொன்றுமே பரிபூரணமாயிருக்கிறது. அவரால் இன்றைக்கு ஒரு தீர்மானத்தை செய்து, நாளைக்கு அதைவிட ஒரு சிறந்த தீர்மானத்தை செய்ய முடியாது. அவருடைய முதல் தீர்மானமே பரிபூரணமாயிருக்கிறது. ஆகையால், அவர் சொல்லக்கூடிய எதில் வேண்டுமானாலும் உங்களுடைய ஆத்துமாவை அப்படியே பற்றியிருக்கும்படி செய்யலாம், அதுதான் சத்தியம். 49. ஒரு முறை ஒரு மனிதனை எப்படி இரட்சிப்பது, என் கிற ஒரு தீர்மானத்தை செய்யும்படியாக தேவன் அழைக்கப் பட்டார், அவர் அதை செய்த வழி என்னவென்றால், ஏதேன் தோட்டத்தில் குற்றமற்ற ஒன்றினுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையைக் கொண்டு அதை செய்தார். அதை தவிர்த்து வேறு வழியில், மனிதன் மனிதனை இரட்சிக்கும்படியாக உலகத்திலிருக்கும் எல்லாவற்றையும் முயற்சி செய்தான்; அவர்கள் பட்டணங்களை கட்டினார்கள், அவர்கள் கோபுரங்களை கட்டினார்கள், அவர்களிடம் ஸ்தாபனங்களும் (organizations), கல்வியும், மற்றும் எல்லாமுமே இருந்தன, ஆனால் அந்த ஒட்டு மொத்த காரியமும் முழுவதும் தோல்வியடைந்துவிட்டது. எப்போதுமே தேவன் ஒரு மனிதனை இரட்சிப்பதற்கு ஒரே ஒரு வழி மட்டும்தான் இருக்கிறது. அது குற்றமற்ற ஒன்றினுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமானதாக இருக்கிறது. அதுதான் ஒரே ஒரு வழி. அதுதான் தேவனுடைய முதல் தீர்மானம். அவர் எப்போதுமே அதனோடுதான் தரித்திருக்கிறார். 50. தேவன் ஒரு மனிதனை சுகப்படுத்தினார் என்றால் அவனை எந்த அடிப்படையில் அவர் சுகப்படுத்தினாரோ, அந்த இடத்திற்கு அடுத்தவன் வரும்போது அவனையும் அவர் சுகப்படுத்த வேண்டியவராயிருக்கிறார். அவர் சுகப்படுத்தவில்லையென்றால், அவர் முதன் முதலில் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தபோது அவர் செய்தது தவறாகிவிடும். 51. அவர் எப்போதாவது ஒரு தீர்மானத்தை செய்தால், அவர் எப்போதுமே அதனோடுதான் தரித்திருக்க வேண்டும். அவர் தரித்திருக்கவில்லையென்றால், பின்பு அவர் தவறான தீர்மானத்தை செய்துவிட்டார். பாருங்கள்? தேவன் ஒரு தவறான தீர்மானத்தை செய்தார் என்று யாரால் கூற முடியும்? பாருங்கள்? நம்மால் அதை கூற முடியாது. எனவே தேவன் எப்போதுமே தன்னுடைய தீர்மானத்து டன் தரித்திருக்க வேண்டும். எனவே அவர் அதை செய்யும்போது, அதற்கு மேல் வேறொன்றுமே இல்லை. 52. எனவே அவர், "உன் இனத்தையும், எல்லாவற்றையும், அங்கே பாபிலோனிலிருந்து வருகிற அந்த எல்லா அவிசுவாசத்தையும் விட்டு உன்னை வேறுபிரித்துக்கொள்" என்றார். 53. உலகத்திலிருந்த முதல் பெரிய ஸ்தாபனம்(organization) பாபிலோன்தான், எல்லா பட்டணங்களையும் அது இந்த ரே பட்டணத்திற்கு வரி செலுத்தும்படி ஒருங்கிணைத்த போது, இன்றைக்கு காணப்படுகிற இந்த எல்லா கொள்கை களும் (isms) மற்றும் புதிய காரியங்களுக்கும் கச்சிதமான மாதிரியாக இருந்தது. நீங்கள் ஹிஸ்லாப்பின் இரண்டு பாபிலோன்களையும் (Hislop's Two Babylons, புத்தகத்தின் பெயர்], பிறவற்றையும் எப்போதாவது வாசித்திருந்து, பின்பு ஆதியாகமத்திற்கு வந்திருந்தால், ஆதியாகமம்தான் தொடக்கமாயிருக்கிறது, வித்தாயிருக்கிறது என்பதை உங்களால் காணமுடியும், நீங்கள் இந்த எல்லா கொள்கைகளும் மற்றவைகளும், சரியாக அங்கே பொறுத்தப்பட்டு இருக்கிறதை பார்ப்பீர்கள். 54. பாருங்கள், அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய வேர்க ளோடும் (curious roots) அதுபோன்றவைகளோடும் இருந்த அந்த ஸ்திரீயிலிருந்து, அங்கிருந்து வந்ததான அந்த வணங்கா கழுத்துள்ள (self-starched) அந்த பரிசேயர்கள், சரியாக இயேசுவின் நாட்களில் வந்தார்கள். பரிசேயர்கள் ஆவியையோ (Spirit) அல்லது மற்ற எதையுமே விசுவாசிக்கவில்லை, மேலும் அவர்கள் இயேசுவை தடைசெய்தார்கள். இயேசு, "அவர்களை விட்டுவிடுங்கள். குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்கள். விட்டுவிடுங்கள்..." என்றார். அவர் தொடர்ந்து சென்று பிரசங்கித்தார், வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார், மேலும் அற்புதங்களை செய்தார், மாறாமல் அப்படியே செய்துகொண்டிருந்தார். அது அவரை நிறுத்தவே இல்லை, ஏனெனில் அவர்தான் அந்த வார்தையாயிருந்தார். என்ன நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வார்த்தையானது சென்று கொண்டே இருக்கும்.. எனவே அந்த காரியங்கள் தொடர்ந்து சென்று, இறுதியாக இங்கே இந்த கடைசி நாட்களில் வந்து பூப்பூக்கிறது (blossom) என்பதை நாம் காண்கிறோம். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோலவே, இதுவும் அவ்வாறே இருக்கும். 56. இப்போது, எல்லா அவிசுவாசத்திலிருந்தும் முற்றிலுமான வேறுபிரிதல். நினைவில்கொள்ளுங்கள், தேவன் எதைச் செய்யச்சொன்னாரோ அதற்கு முழுமையாக கீழ்படியும் வரை, கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாம் முற்றிலும் முழுநிறைவாக ஒருபோதும் ஆசீர்வதிக்கப்படவே இல்லை. மேலும் நாமும், தேவன் எதைச் செய்யச் சொன்னாரோ அதற்கு கீழ்படியும்வரை, ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதுமே எதிலுமே ஆசீர்வதிக்கப்பட்டு, ஆசீர்வாதத்தை பெற்றவர்களாக இருக்க மாட்டோம். 57. இன்னொரு காரியத்தை நீங்கள் இங்கே 12-ம் அதிகாரத்தில் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்பு கிறேன், அதாவது அந்த உடன்படிக்கையானது முழுக்க முழுக்க நிபந்தனையே இல்லாததாயிருந்தது. அதில் மறை முகமான நிபந்தனைகள் (strings) என்று கூட எதுவுமே இணைக்கப்படவில்லை. "நீ செய்தால்"என்றல்ல, "நான் செய்துவிட்டேன்". அதில் செய்தால் (if's) என்று எதுவுமே இல்லை. "நான் அதை ஏற்கனவே செய்துவிட்டேன்." அவர் ஆபிரகாமுக்கு அந்த உடன்படிக்கையை, நிபந்தனையே இல்லாமல் கொடுத்தார். 58. இப்போது அறிந்துக்கொள்ளுங்கள், ஆதாமிய உடன்படிக்கையில் (Adamic Covenant), "நீ இந்த விருட்சத்தை தொடாமலிருந்தால், அப்போது நான் இன்னின்னதை செய்வேன். ஆனால் நீ அதை தொட்டால், அப்போது நான் இன்னின்னதை செய்ய வேண்டியிருக்கும்"என்பதாக இருந்தது. பாருங்கள், அதில் பிரமாணமானது (law) இணைக்கப்படிருந்தது. 59. ஆனால் இந்த உடன்படிக்கையிலோ, "நான் உன்னை ஏற்கனவே அநேக ஜாதிகளுக்கு தகப்பனாக ஏற்படுத்தி விட்டேன்." அவர் ஏற்-... அது முழுவதும் நிபந்தனையே இல்லாததாயிருந்தது. இந்த உடன்படிக்கை கலப்படமில்லாத சுத்த கிருபையாயிருந்தது, அப்படியே முற்றிலுமான கிருபையாயிருந்தது. இந்த உடன்படிக்கையை காத்துக்கொள்ள அவர்கள் செய்ய வேண்டியிருந்த ஒரே ஒரு காரியம் என்னவென்றால் அந்த தேசத்தில் குடியிருந்து அதில் நிலைத்திருப்பது மட்டுதான்; இந்த உடன்படிக்கையோடு வந்த ஒவ்வொரு ஆசீர்வாதமும், அவர்களோடு இருந்தது. அவர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால் அந்த தேசத்தில் குடியிருப்பது மட்டு தான். அவர்கள் எகிப்துக்கு சென்றபோது, அவர்கள் தங்களுடைய ஆசீர்வாதத்தை இழந்துப் போனார்கள், ஆனால் தங்களுடைய உடன்படிக்கையையோ இழந்துப்போகவில்லை என்பதை இப்போது நாம் காண்கிறோம். இந்த உடன்படிக்கை இன்னமும் அங்கேயேதான் இருந்தது. அவர்கள் ஆசீர்வாதத்தை இழந்துப்போனார்கள், ஆனால் அவர்களுடைய உடன்படிக்கையையோ இழந்துப்போகவில்லை, ஏனெனில் அவர்களுடைய உடன்படிக்கை நிபந் தனையே இல்லாத கிருபையாயிருந்தது. 60. யாத்திராகமத்தில், 19-ம் அதிகாரத்தில், யாத்-... இஸ்ரவேல் எப்போதுமே செய்திராத தன்னுடைய மோசமான கண்மூடித்தனமான ஒரு செயலை செய்தது, எப்போதென்றால் அது கிருபையை தள்ளிவிட்டு நியாயப்பிரமா ணத்தை ஏற்றுக்கொண்டபோதுதான். கிருபை கிருபை என்ன செய்தது என்பதை பாருங்கள். கிருபையானது அவர்களுக்கு ஒரு இரட்சகனை அளிக்க வேண்டியிருந்தது, அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிக்க வேண்டியிருந்தது, அவனை உறுதிப்படுத்தும்படி அக்கினி ஸ்தம்பத்தோடு உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையோடு இருந்தது, அது பலிக்கான ஆட்டுக்குட்டியாயிருந்தது. கிருபையானது அவர்களுக்கு ஒரு மகத்தான எழுப்புதலை அளித்தது கிருபையானது அவர்களை நடத்திவந்து, சிவந்த சமுத்திரத்தை திறந்து, அதை கடந்து செல்லும்படி அவர்களை அழைத்து சென்றது. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவர்களை இரட்சித்தது, எல்லாமே கிருபையின் மூலமாக நடந்தது. ஆனால் அவர்கள் தங்களுக்கு பெரிய பெயர்களை உண்டாக்கிக் கொள்ள ஏதோவொன்றை விரும்பினார்கள். 61. இப்போது, அது இன்றைக்கு இருக்கும் ஜனங்களை போல இல்லையா, அது அப்படியே அதேபோன்ற காரியமாயிருக்கிறது. அவர்கள் அப்படிதான் இருப்பார்கள், அதில் எதாவது ஒரு இடத்தில் மனிதன் தன்னைத்தானே நுழைத்து கொள்ளவேண்டும். இஸ்ரவேல் கிருபையை புறக்கணித்து அதற்கு பதிலாக நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டபோது, அங்குதான் அது தன்னுடைய மிகப்பெரிய தவறை செய்தது. மேலும்... இன்னமும், ஆனால் அவர்களோடு அவர் செய்த உடன்படிக்கையோ இன்னமும் நிபந்தனையே இல்லாததாயிருந்தது. இன்றைக்கும் அது மாறாமல் அப்படியே தான் இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். 62. பின்னர் ஆபிரகாம், அவனுக்கு இந்த நிபந்தனைகள் அளிக்கப்பட்ட பின்பு, அவன் தன்னுடைய பிரயாணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து சென்றான். இப்போது அவன் வெளியே சென்றுவிட்டான் என்பதை நாம் பார்க்கிறோம். 63. 13-ம் அதிகாரத்தில், அவன் இறுதியாக தேவனுக்கு முற்றிலுமாக கீழ்ப்படியக்கூடிய ஒரு இடத்திற்கு வந்தான். இப்போது நாம் பார்க்கிறோம், 13-ம் அதிகாரத்தில், அந்த லோத்து... முதலில், அவன் தன் தகப்பனை கூட அழைத்து சென்றான், ஒருவிதத்தில் அந்த வயதான மனிதன் எப்போதுமே வழியில் குறுக்கே இருந்தார். அவன் ஒரு கூட்டத்தை தன்னுடன் கூடவே இழுத்துச் செல்ல முயற்சித்தான். நீங்கள் அதை செய்யும்போது, அங்குதான் பிரச்சனையே வருகிறது. தேவன், "வேறுபிரி" என்று கூறியிருந்தார். 64. "நல்லது, நான் உங்களிடம் கூறுகிறேன், அவர்கள் முற்றிலுமாக விசுவாசிப்பதில்லை, ஆனால்..." அப்படியானால் அதை விட்டு விலகிவிடுங்கள். அதுதான் செய்யவேண்டிய ஒன்றாயிருக்கிறது, அதை விட்டு விலகியிருங்கள். 65. பின்பு அந்த வயதான மனிதன், அவர் இறுதியில், அவர்கள் அவரை அடக்கம் செய்த பின்பு, அப்போது, சொல்லப்போனால் லோத்து பிஸ்கட்டிலிருக்கும் ஒரு-ஒரு மயிரை போன்று ஆனான். அவன் முறுமுறுக்க ஆரம்பித்தான் என்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் இருவரும் ஐஸ்வரியவான்களானார்கள், அவர்களுக்கு வேண்டியது மிகவும் ஏராளமாக இருந்தது. அப்போது அந்த லோத்து வாக்குவாதம் பண்ண ஆரம்பித்தான், அவனுடைய மேய்ப்பர்கள் ஆபிரகாமின் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வாக்குவாதம் பண்ண ஆரம்பித்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். 66. அவரை சேவிக்கும்படிக்கு, என்ன செய்ய வேண்டுமென்று அவர் அவனிடம் கூறியிருந்தாரோ அதற்கு கீழ்ப்படியும்படியாக, அவன் தன் இனத்தார் எல்லாரிடம் இருந்தும், தன் எல்லா ஜனங்களிடமிருந்தும் முற்றிலுமாக தன்னை வேறுபிரித்துக்கொள்வதற்கான விசுவாசத்தை அவரால் முடியவில்லை... தேவனால் -...ஹாமில், ஆபிரகாமில் முழுமையாக காண முடியவில்லை, என்பதை நாம் காண்கிறோம். 67. எனவே, இங்கே, பலிபீடத்தில் தேவன் ஆபிரகாமோடு பேசி, அவன் என்ன செய்யவேண்டும் என்று கூறினார் என்பதை நாம் காண்கிறோம். இறுதியில், லோத்து, ஆபிர காமுக்கும் லோத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்தபோது; அவன் அவனுடைய சகோதரனாகிய ஆரானின் குமாரனாயிருந்தான், அவர்கள்... அது அவனுடைய சகோதரனின் குமாரன் (nephew). இறுதியாக, "நாம்... இப்போது நாம் சகோதரர்களாயிருக்கிறோம். நம்மிடையே எந்த சச்சரவும் வேண்டாம். இப்போது நீ கிழக்குப்பக்கம் போனால், நான் மேற்குப்பக்கமாக போகிறேன். நீ மேற்குப்பக்கம் போனால், நான் கிழக்குப் பக்கமாக போகிறேன். இப்போது நீயும் நானும் பிரிந்து செல்லலாம், நம்மிடம் வேண்டாம்... நம் எல்லாருக்கும் இங்கே மிக அதிகமான இடமிருக்கிறது. எனவே நீ சென்று, நீயே தேர்ந்தெடு" என்று கூறினான். இப்போது அது ஆபிரகாமில் இருந்த உண்மையான கிறிஸ்தவ ஆவியாயிருந்தது (Christian spirit), எதிரிக்கு கூட தேர்ந்தெடுக்கும் வசதியை கொடுப்பது. எனவே அவன் தன் வழியை தேர்ந்தெடுக்கும்படி அவன் அனுமதித்தான். 68. இன்றைக்கு இருக்கும் அநேகரைப் போல, லோத்தும் அந்த சந்தர்ப்பத்தை (opportunity) பார்த்தான். அவன் அந்த கண்டிப்புகளில் (strictness) இருந்து மாத்திரம் வெளியே வந்துவிட்டால், ஏன், அவன் தனக்கு கொஞ்சம் டாலர்களை சம்பாதித்துக் கொள்ளலாம், அவன் ஒரு புகழ்பெற்ற மனிதனாகிவிடலாம். எனவே அவன் சோதோமை நோக்கிப் பார்த்தான். அது நீர்வளம் பெருகின தேசமாகவும், பெரிய நகரமாகவும், சிறந்த உப்பு தொழிற்சாலையையும், அது போன்றவைகளையும் கொண்டதாக இருந்தது. அவர்கள், அவர்கள் அங்கே இருந்து ஏற்றுமதிகளை (exports) செய்தார்கள். அடுத்து, மீண்டுமாக, அது முழுவதும் கொண்டாட்ட நேரங்களை கொண்டதாக இருந்தது, பெண்கள் தங்களுடைய யேசேபேல் முகவர்ணங்களுடனும் மற்றவைகளோடும் இருந்தார்கள், அருமையான நேரத்தை கொண்டு இருந்தார்கள். அவனுடைய மனைவியும் கூட சிறிது அந்த பக்கமாக சாய்ந்தாள், ஏனெனில், நாம் பார்க்கிறோம். அவன் அங்கே மேயர் (mayor) ஆனவுடன், அவளுக்கு ஒரு விதத்தில் - அவளுக்கு ஒருவிதத்தில் அந்த ஜனங்களின் வழி பிடித்திருந்தது. நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று அதுமட்டும்தான், ஏதோவொன்றுடன் கலந்துவிட்டால் போதும். பாருங்கள்? 69. உங்களை நீங்களே வேறுப்பிரித்துக்கொண்டு, மேலும் - மேலும் அந்த காரியங்களை விட்டு, உங்களால் அவைகளைப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு மிக தூரமாக விலகி சென்றிட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அதாவது, நீங்கள் ஒன்றை மட்டும்தான் பார்க்க வேண்டும், அது அவரையும், அவர் செய்த வாக்குத்தத்தத்தையும் மட்டுமே. 70. ஆனால் திருமதி. லோத்து, அவளுக்கு ஒருவிதத்தில் அது பிடித்திருந்தது. அவள் இப்படியாக, "அன்பே, இப்போது நான் அங்கே சென்றிருந்தேன், அங்கிருக்கும் பெண்கள் எப்படியாய் உடை உடுத்துகிறார்கள் என்பதை நீங்கள் பாருங்கள், அந்த பெண்பிள்ளைகளை பாருங்கள். நம்முடைய பெண்பிள்ளைகள் எப்படி உடை உடுத்து கிறார்கள் என்பதையும் பாருங்கள். எனவே அவர்கள் மிகமிக நவீனநாகரீகமாக (modern) இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?" என்று கூறியிருந்திருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை. ஓ, என்னே! நாம் மீண்டுமாக இன்னொரு சோதோமிற்குள் வந்துவிடவில்லையா, ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அங்கே நாம் பார்க்கிறோம். 71. ஆனால் ஆபிரகாமோ வாக்குத்தத்தத்தோடு தரித்திருந்தான். அடுத்து, அது அப்படியாக தொடர்ந்து செல்லசெல்ல, நாம் பார்க்கிறோம், அந்த... அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் வேறுபிரிகையில், லோத்து... ஆபிரகாம், கொஞ்ச தூரத்தில் இருந்த, மோசமான நிலங்களை எடுத்துக் கொண்டு, தன்னுடைய கால்நடைகளுக்கு அதிக மேய்ச்சல் இல்லாத இடத்தில் தங்கினான். இருந்தாலும், அந்த வழியில் செல்ல அவன் ஆயத்தமாயிருந்தான், ஏனெனில் தேவன் அவனை அந்த தேசத்தில் வைத்திருந்தார், அந்த இடத்தில்தான் அவன் தங்க விரும்பினான். அதை எடுத்துக்கொள்ள ஆயத்தமாயிருந்தான். 72. இப்போது அவன் இறுதியில், தேவனுக்கு முழுமை யாக கீழ்ப்படிந்தபோது, இறுதியில் அவன் தன்னை முற்றிலுமாக வேறுபிரித்துக்கொள்ளும்படி, அவன் தேவனுக்கு கீழ்ப்படிவதின் முழுமைக்கு வந்தபோது, அப்போதுதான் கர்த்தர் அவனுக்கு மீண்டுமாக தரிசனமானார் (appeared). அவன் அவ்வாறு செய்யும்வரை, கர்த்தர் ஆபிரகாமை விட்டு விலகியே இருந்தார். ஆனால் அவன் முழுமையாக கீழ்ப்படிந்தபோது, அப்போது லோத்து... தேவன் அவனுக்கு தரிசனமாகி, அவர், "ஆபிரகாமே, உன் கண்ணை ஏறெடுத்துப்பார். கிழக்கை நோக்கிப்பார், மேற்கை நோக்கிப்பார், வடக்கை நோக்கிப்பார், தெற்கை நோக்கிப்பார், அது எல்லாமே உனக்கு சொந்தமானது" என்று கூறினார். ஆமென். இப்போது, எனக்கு அது பிடிக்கும். 73. உங்களுக்கு தெரியுமா, அது நான் இரட்சிக்கப்பட்ட போது இருந்த ஏதோவொன்றை போன்றிருக்கிறது. தேவன் ஒரு மகத்தான தேவன் என்பதை நான் எப்போதுமே கேட்டிருக்கிறேன். உங்களுக்கு தெரியுமா, நான் இரட்சிக்கப்பட்டபோது, நான்... யாரோ ஒருவர் கூறினார், 'இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம் ஒரு சபையில் சேர்ந்து, உன்னுடைய பெயரை இங்கே இந்த பாப்டிஸ்டு சபையின் சபைச்சுருளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீ செய்யவேண்டியதெல்லாம் அவ்வளவுதான்." 74. ஆனால், உங்களுக்கு தெரியுமா, நான் ஏதோவொன் றிற்கு சுதந்தரவாளியாயிருக்கிறேன் என்பதை நான் ஒரு நாள் கண்டுகொண்டேன், அதாவது என்னிடம் என்ன இருக்கிறது என்பதை காணும்படி நான் - நான் - நான் அதை ஆராய்ந்து பார்க்க விரும்பினேன். உங்களுக்கு தெரியும், நான் அப்படிதான். அநேக அறைகளை கொண்ட ஒரு - ஒரு பெரிய வளாகம் (arcade) உனக்கு சொந்தமானதாயிருப்பதைப் போன்று இருக்கிறது, அதில் இருக்கும் ஒவ்வொன் றுமே உனக்கு சொந்தமானது. 75. வாக்குத்தத்தங்களை கண்டடையும்படி, நீ வேதாக மத்தை முழுவதுமாக ஆராய்ந்து பார்க்காதவரை, எது உனக்கு சொந்தமானது என்பது உனக்கே உனக்கே தெரியாது. ஆமென். அவர்கள் தங்களால் கூடுமானால் அதை விட்டு உன்னை விலகியிருக்கும்படி செய்வார்கள்; ஆனால் அவை உன்னுடையவைகள். ஒவ்வொரு வாக்குத்தத்தமும் ஆபிரகாமுக்கும் அவனுக்கு பின்வரும் அவனுடைய வித்திற்குமானது. ஆமென். வார்த்தையில் இருக்கும் ஒவ்வொரு தெய்வீக வாக்குத்தத்தமும் ஆபிரகாமுக்கும் அவனுடைய வித்திற்கும் சொந்தமானதாயிருக்கிறது, நீ அதற்கு சுதந்தரவாளியாயிருக்கிறாய். ஒரு சுதந்தரவாளி! ஓ, என்னே! முழுவதும் ஆராய்ந்து பார்த்து நான் எதை பெற்றிருக்கிறேன் என்பதை காண விரும்புகிறேன். யாரோ ஒருவர் ஏதோவொன்றை எனக்கு கொடுத்தால், நான் அதை முழுவதும் பார்க்க விரும்புவேன். நான் வேதாகமத்தையும் முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து, எனக்கு எது சொந்தமானது என்பதை காண விரும்புவேன். ஆபிரகாமின் ஒவ்வொரு வித்தும் அதை செய்யவேண்டும், நீ மறுபடியும் பிறந்து, தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, மேலும் பரிசுத்த ஆவியானவர் உன் மீது இருக்கும் போது, அந்த வாக்குத்தத்தங்களில் ஒவ்வொன்றிற்கும் நீ சுதந்தரவாளி யாயிருக்கிறாய். 76. உங்களுக்கு தெரியும், அது நான் கூறிய அநேக அறைகளை கொண்ட ஒரு பெரிய வளாகத்தை(arcade) போன்றிருக்கிறது, ஏனெனில் நாம் அந்த வளாகத்திற்குள் (arcade) ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம்பண்ணப்பட்டோம், அந்த சரீரம் கிறிஸ்துவே, அது ஆபிரகாமின் இராஜரீக வித்தாய், அதில் இருக்கும் ஒவ்வொ ன்றிற்குமே சுதந்தரவாளியாயிருக்கிறது. ஆமென். தேவனில் இருந்த ஒவ்வொன்றையுமே, தேவன் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார்; கிறிஸ்துவுக்குள் இருந்த ஒவ்வொன்றையுமே, அவர் விசுவாசிக்குள் ஊற்றினார். ஆமென். தேவன் நமக்கு மேல், தேவன் நம்மோடு, தேவன் நமக்குள்! அனைத்துமே, புஸ்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உன்னுடையவைகளாயிருக் கின்றன, உன்னால் அதை விசுவாசிக்க முடிந்தால், அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்கும்படிக்கு போதுமான விசுவாசம் உனக்கிருந்தால். புஸ்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உன்னுடையவைகளாயிருக்கின்றன. 77. உங்களுக்கு தெரியும், நான் சுற்றிப் பார்ப்பேன். சிறிது உயரமான எதையேனும் நான் கண்டு, அதற்குள் என்ன இருக்கும் என்று வியப்படைந்தால், நான் ஒரு ஏணியை எனக்கு கொண்டுவந்து, அதற்கு பக்கத்தில் போட்டு, மேலே அதனிடம் செல்லும் வரை நான் தொடர்ந்து ஏறிக் கொண்டே இருப்பேன். வேதாகமத்தில் இருக்கிற வாக்குத்தத்தமும் கூட அப்படிதான் இருக்கிறது, ஏதேனும் எனக்கு ஒருவிதத்தில் இரகசியமாக இருப்பது போன்று தோன்றினால், அதை அடையும்வரை நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருப்பேன். அவ்வளவுதான். அப்படிதான் அதை செய்யவேண்டும். நீ... நீ அதற்கு சுதந்தரவாளியாகும் வரை, அதற்கான வாக்குத்தத்தத்தை நீ பெறும்வரை, அதற் கான உரிமையை நீ பெறும்வரை, தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இரு, தொடர்ந்து பற்றி பிடித்துக்கொண்டே இரு, ஏறிக்கொண்டே இரு, விசுவாசித்துக்கொண்டே இரு, அப்போது, "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்." 78. இப்போது ஆபிரகாம் அந்த தேசம் முழுவதும் நடந்து திரிந்தான் என்பதை நாம் காண்கிறோம். தேவன் அவனிடம் கூறினார், "தேசம் எம்மட்டோ அம்மட்டும் நடந்து திரிந்து, அதைச் சுற்றிப் பார். இங்கிருக்கும் எல்லாமே உனக்கு சொந்தமானது. இதில் இருக்கும் ஒவ்வொரு அடியும் உனக்கானது. இது எல்லாமே உனக்கு சொந்தமானது" என்றார். 79. அடுத்ததாக, அதாவது, இப்போது யாத்திராகமம் 14-ம் அதிகாரத்தில் அல்லது... என்னை மன்னித்து விடுங்கள், ஆதியாகமம் 14-ம் அதிகாரத்தில், நாம் காண்கி றோம். ஆதியாகமம் 14-ம் அதிகாரத்தில், ஆபிரகாமும் லோத்தும் பிரிந்து இருந்தனர், இறுதியில் லோத்து சில பிரச்சனைகளுக்குள் மாட்டிக்கொண்டான். உங்களுக்கும் எப்போதுமே அப்படியே ஆகும், விசுவாசிகளை விட்டு உங்களை நீங்கள் பிரித்துக்கொள்ளும்போது நீங்களும் பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வீர்கள். அந்த இராஜாக்கள் ஒன்றுகூடி, யுத்தம் செய்தார்கள் என்பதை நாம் காண்கிறோம். அவர்கள் வந்து சோதோமை கைப்பற்றினார்கள், கொமோராவை கைப்பற்றினார்கள், அந்த தாழ்வான பகுதிகளிலும் (dales), பள்ளத்தாக்குகளிலும் (valleys) இருந்த அவர்களுடைய எல்லா இராஜாக்களையும் கைப்பற்றி, லோத்தையும் பிடித்தார்கள். வெறும் ஒரு சில ஜனங்கள் மட்டுமே மலைகளுக்கு தப்பி ஓடினார்கள். 80. அவர்கள் தப்பியோடியபோது, தப்பினவர்களில் யாரோ ஒருவன் வந்து, எபிரெயனாகிய ஆபிரகாமிடம் கூறினான், "சோதோமும், கொமோராவும் வீழ்ந்துவிட்டது, அவர்களுடைய இராஜாக்களையும், மேலும் மேலும் மற்றவர்களையும், அவர்களுடைய ஜனங்களையும், அவர்களுடைய போஜனபதார்த்தங்களையும், அவர்களிடமிருந்த எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் லோத்தையும், அவனுடைய மனைவியையும், அவனுடைய குமாரத்திகளையும், எல்லா பெண்களையும், அவர்கள் கொண்டுபோய் விட்டார்கள்" என்றான். 81. இப்போது, ஆபிரகாம் -- தன்னுடைய சகோதரனுக்காக பின்தொடர்ந்து செல்கிற இந்த கிறிஸ்தவ ஆவியை கவனியுங்கள். லோத்து, பின்வாங்கி போயிருந்தாலும், பின்னிட்டு போயிருந்தாலும், அந்த நிலையிலும் கூட, ஆபிரகாம் அவனை நேசித்தான். லவோதிக்கேயாசபையில் இருக்கும் இயேசுவைப் போல, அவன் பின் தொடர்ந்து சென்றான். 82. தங்களுடைய சபையை விட்டு அவரை அவர்கள் வெளியே தள்ளிவிட்டிருந்தாலும், அவர் வெளியே இருந்து, தட்டிக்கொண்டு, மீண்டுமாக உள்ளே வர முயற்சித்துக்கொண்டிருக்கிறார். [சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழு முறை தட்டுகிறார்]. அவர் உள்ளே வரும்படி கதவை திறக்கிற யாராவது அவருக்கு இருந்தால் போதும்! 83. அதுதான் அங்கேயிருக்கிற ஆபிரகாமின் ஆவி, பாருங்கள், தன்னுடைய விழுந்துபோன, இழிவான சகோதரனையும் பின் தொடர்ந்து சென்றது. அவன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான், அவன் தன்னுடைய முந்நூறு ஆண் வேலைக்காரர்களுக்கு ஆயுதம் தரிப்பித்து தன்னுடன் கூட அழைத்து சென்றான். அவன் அவனை தாணில் சந்தித்தான்; அது பாலஸ்தீனாவில் இருக்கும் கடைகோடி இடம். அவன் அவனை அங்கே சந்தித்து, இராக்காலத்தில் தன்னுடையர்வகளுடன் பிரிந்து, பவிஞ்சுகளாய் துரத்தி சென்று, சண்டையிட்டு அந்த சேனைகளை வீழ்த்தி, அந்த இராஜாக்களை மேற்கொண்டு, அவர்களை முறியடித்து, கொண்டு போகப்பட்டிருந்த எல்லாவற்றையும் திரும்ப கொண்டுவந்தான். 84. கவனியுங்கள், அவன் திரும்ப வந்தபோது, இங்கே என்னே ஒரு அழகான காட்சியிருக்கிறது. அந்த காரணத்தால் தான், யேகோவா-யீரே என்கின்ற என்னுடைய செய்திக்கு நான் செல்வதற்கு முன்னர் நான் இதை கொஞ்சம் முன்னோட்டமாக (preview) பார்க்க விரும்புகிறேன், எனவே நாம் பெற்றுக்கொள்ள... தொலைந்து போயிருந்த எல்லாவற்றையும், வழித்தவறி (wayward) சென்றிருந்த தன் சகோதரனையும், பிள்ளைகளையும், ஆபிரகாம் திரும்ப அழைத்துக்கொண்டு வந்தபோது நீங்கள் கவனித்தால், அவன் அவர்களை திரும்ப கொண்டு வந்தபோது, அவனை சந்திக்கும்படி இராஜாக்கள் எதிர்கொண்டு வந்தார்கள். 85. மெல்கிசேதேக்கு எதிர்கொண்டு வந்தார், "அவர் சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா, நீதியின் ராஜா, எருசலேமின் ராஜா; தகப்பனும் தாயும் இல்லாதவர், நாட்களின் தொடக்கமும், ஜீவனின் முடிவும் இல்லாதவர்." இராஜாவை முறி... முறியடித்து அவன் வந்தபோது மெல்கிசேதேக்கு அவனை அங்கே சந்தித்தார், அவருக்கு தான் கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாம் (எபிரெயர் 7-ல்) இந்த மனிதனை சந்தித்து பத்தில் ஒன்றை, தசமபாகமாக செலுத்தினான். இந்த மனிதன் என்னே ஒரு மகத்தான மனிதனாயிருந்திருக்க வேண்டும்! அவர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? "அவருக்கு தகப்பன் இல்லை. அவருக்கு தாயுமில்லை. அவருக்கு தொடக்கமே இல்லை." அவர் யாராயிருந்தாலும், அவர் இன்னுமாக ஜீவித்துக்கொண்டு இருக்கிறார். "அவருக்கு முடிவே இல்லை. சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா!" ஓ, யார் இந்த மகத்தான மனிதன்? 86. நாம் இங்கே என்னே ஒரு மாதிரியை காண்கிறோம் என்பதை கவனியுங்கள். யுத்தமானது முடிந்த பின்னர், உண்மையான விசுவாசி சத்துருவுடன் சண்டையிட்டு, எல்லைகளை தகர்த்து, தன்னுடைய சகோதரனை பிடிக்க முயற்சித்து - வழித்தவறி சென்ற (wayward) சகோதரனை ஆபிரகாமின் உண்மையான வித்து திரும்ப கொண்டுவந்த பிறகு, மெல்கிசேதேக்கு எதிர்கொண்டுவந்து, திராட்சரசத்தையும், அப்பத்தையும் கொடுத்தார், இராபோஜனம் (communion), யுத்தம் முடிந்த பின்னர் இராபோஜனத்தை (communion) கொடுக்கிறார், யுத்தத்திற்கு பின்னர் அவனுக்கு இராபோஜனத்தை (communion) கொடுத்தார். 87. இங்கே பூமியிலே, இந்த யுத்தம் முடிந்து, ஜெயங்கள் ஜெயிக்கப்பட்டதற்கான ஒரு மிக அழகான மாதிரியாக இருக்கிறது. வழித்தவறி சென்றவன் (wayward) மீண்டுமாக கொண்டுவரப்பட்டப்பிறகு, "பிதாவின் ராஜ்யத்திலே அவர்கள் அதை மீண்டும் நவமாய் புசிப்பார்கள்" என்று இயேசு கூறினார். அப்படியானால், யுத்தமானது முடிந்த பின்னர், நாம் உள்ளே செல்லும்போது, நாம் செய்கிற முதல் காரியம் என்னவென்றால், தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கும் மேஜையின் மீது உட்காருவதே. அங்கே யுத்தம் பண்ணினவர்கள், உட்கார்ந்து, ஜெயம்கொண்டு, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரம் தரித்து, அப்போது, அந்த மறுக்கரையிலே, பிதாவின் ராஜ்யத்தில், அவர்கள் மீண்டுமாக அப்பத்தையும் திராட்சரசத்தையும் எடுப்பார்கள். ஆபிரகாம் எதிர்கொண்டு சென்று, லோத்தை பிடித்து, அவனை மீண்டுமாக கொண்டுவருவது என்பது, என்னே ஒரு அழகிய காட்சியாயிருக்கிறது. 88. இப்போது அடுத்ததாக நாம் காண்கிறோம், அதாவது 15-ம் அதிகாரத்தில், மிகமிக குறிப்பிடத்தக்க சிறப்பானதை (outstanding) நாம் காண்கிறோம். இப்போது ஆபிரகாம் யார் என்றும், ஆபிரகாமையும், அவனுக்கு பின் வரும் அவனுடைய வித்தையும் பார்ப்பது என்பது, எனக்கு - எனக்கு ஒருவிதத்தில் இது மிகமிக அதிகமாக பிடிக்கும். நாம் இங்கே காண்கிறோம், அதாவது, ஆபிரகாம் இந்த மகத்தான எல்லாவற்றையும் செய்தபிறகு; தேவனை விசுவாசித்து, வாக்குத்தத்தத்தை பற்றிப்பிடித்துக் கொண்டு இருந்து, தன்னைத் தானே வேறுபிரித்து, வழிநெடுக கர்த்தருடைய கட்டளைகளின் வழிகளை கைக்கொண்ட பிறகு; தேவன் அவனுக்கு பலிபீடத்திலே (altar) தரிசனமானார் என்பதை நாம் காண்கிறோம். ஆபிரகாம் அவரிடம் இந்த கேள்வியை கேட்டான், அவன், "இப்போது, யார் எனக்கு சுதந்தரவாளி ஆனால் - ஆனால் இந்த தமஸ்கு ஊரானாகிய எலியேசரோ?". இப்போது நீர் எனக்கு ஒரு புத்திரசந்தானத்தை (Seed) வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். நீர் ஏதாவதொன்றை பண்ண வேண்டுமென்று நான்- நான் விரும்புகிறேன்; இந்த வாக்குத்தத்தத்தை நீர் எனக்கு உறுதிப்பண்ணி தரவேண்டுமென்று நான் விரும்புகிறேன்" என்று அவன் கேட்டான். 89. தேவனும், தான் அதை உறுதிப்பண்ணுவதாக, அவர் தனக்கும் ஆபிரகாமுக்கும் இடையே செய்த அந்த உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு உறுதிப்பண்ணித்தருவதாக கூறினார். அது உண்மையாயிருக்கப்போகிறது என்பதற் காக இப்போது அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தை தரப்போகிறார். அதாவது, அவன் முதிர்ந்தவனாயிருந்தாலும், இப்போது அவன் சுமார் எண்பத்தைந்து வயதுள்ளவன், ஆனால் எப்படியிருந்தாலும், அவர் அந்த உடன்படிக்கையை காத்துக்கொள்ளப்போகிறார் என்பதை ஒரு அடையாளத்தின் மூலமாக, அவர் அவனுக்கு நிரூபிக்க போகிறார். 90. ஓ, தேவன் எப்போதுமே நமக்கு அடையாளங்களை தருகிறார் என்பதால் நான் மிகவும் மகிழ்கிறேன், ஏனெனில் அவர்... இன்றைக்கு, நாம் இப்போது ஜீவிக்கிற இந்த மணிநேரத்தில், ஒரு அடையாளமானது இந்த பூமியிலே இந்த நேரத்தில் இருக்கவேண்டியிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நாம் அந்த அடையாளத்தை உற்றுநோக்க வேண்டும். 'தேவன் ஜனங்களுக்கு முதலில் ஒரு அடையாளத்தையும் ஒரு எச்சரிக்கையையும் கொடுக்காமல் எதையுமே செய்யமாட்டார். ஒரு உண்மையான அடையாளத்தை ஒரு சத்தம் பின்தொடரும், மேலும் அந்த சத்தம் எப்போதுமே வேதாகம சத்தமாகத்தான் இருக்கும். 91. இப்போது அவர் அந்த உடன்படிக்கையை ஆபிரகா முக்கு அல்லது ஆபிராமுக்கு உறுதிப்பண்ணப்போகிறார், இன்னுமாக ஆபிராமாயிருந்தான். அவர், "ஒரு இளம் கிடாரியை (heifer) உனக்கு எடுத்துக்கொள்" என்றார் (இப்போது, நினைவில்கொள்ளுங்கள் அது பெண் கன்றாருந்தது (calf). "மூன்று வயது பெண் வெள்ளாட்டையும் எடுத்துக்கொள். ஒவ்வொன்றும் மூன்று வயதுடையதாக இருக்க வேண்டும்". கவனியுங்கள், மூன்று வயதுடைய ஒரு கிடாரி (பெண்); [கிடாரி என்றால் இன்னும் கன்றுகுட்டி ஈன்றிராத பெண் மாடு], மூன்று வயதுடைய ஒரு வெள்ளாடு (பெண்). "மேலும் ஒரு ஆட்டுக்கடா (ram) (ஆண்)". ஒவ்வொன்றும் மூன்று - மூன்று வயதுடையது, அவைகள் மூன்றாக இருந்தன. மூன்று பெண்... இரண்டு பெண்ணும் ஒரு ஆணும், புரிகிறதா? மூன்று வயதுடைய, சுத்தமான பலி, ஒரு ஆட்டுக்குட்டி... ஒரு கிடாரி, மூன்று வயதுடைய பெண் வெள்ளாடு, அடுத்து ஒரு ஆட்டுக்கடா (ram). 92. நீங்கள் கவனித்தால், அங்கேயிருந்த அனைத்தும் ஒரு அடையாளமாக ஆகிறது. இப்போது, இங்கேயிருக்கிற இந்த மேடையிலிருந்து நான் உபதேசத்தை பிரசங்கிக்கக் கூடாது, நீங்கள் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அது போதுமானதாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். கவனியுங்கள், இரண்டு, இரண்டு பறவைகளையும் எடுத்துக்கொண்டான். "ஒரு புறாகுஞ்சையும் (pigeon) ஒரு காட்டுப்புறாவையும் (turtledove)," அந்த புறாகுஞ்சும் (pigeon), அந்த காட்டுப்புறாவும் (turtledove), ஒரே குடும்பத்தை (family) சேர்ந்தவைகள். [family- உயிரியல் குடும்பம்] 93. இப்போது அவன் அந்த வெள்... அந்த ஆட்டை துண்டித்தான். அவன் அந்த-அந்த ஆட்டுக்கடாவையும்(ram) அந்த வெள்ளாட்டையும், மற்றவற்றையும் துண்டித்தான். அவன் அவைகளை பாதிப்பாதியாக துண்டித்து, அவை களை துண்டங்களாக்கி, அவைகளை கீழே வைத்தான். ஆனால் அந்த புறாக்களையோ, அவன்... அந்த புறாவை (pigeon), அவன் துண்டிக்கவில்லை. அது என்னவாக இருந்ததென்றால், வேதாகமத்தை அறிந்த எவருக்கும் அது தெய்வீக சுகமளித்தல்தான் என்பது நிச்சயமாக தெரியும். பாருங்கள், அது இரண்டு உடன்படிக்கைகளிலுமே இருக்கிறது. அவன் அவைகளை உள்ளே வைத்தான் என்பதை நாம் காண்கிறோம். சுகமளித்தல் எப்போதுமே சிந்தப்பட்ட இரத்தத்தின் மீது இருக்கும் விசுவாசத்தின்படியே இருக்கிறது, எப்போதுமே. பழைய உடன்படிக்கை தெய்வீக சுகமளித்தலை கொண்டிருக்குமானால், புதிய உடன்படிக்கை அதை எவ்வளவு அதிகமாக கொண்டிருக்கும்? பாருங்கள்? பழைய உடன்படிக்கையே அதை உற்பத்தி செய்ததென்றால், புதியதைப் பற்றி என்ன -- அது மிகவும் மேம்பட்ட உடன்படிக்கையாயிருக்கும்போது, மேம் பட்டதை, மேன்மையான காரியங்களை, மகத்தான காரியங்களை, மேம்பட்ட காரியங்களை பேசுகிறது" புது உடன்படிக்கை! 94. இப்போது இதில் நாம் காண்கிறோம், அதாவது ஆபிரகாம், அவன் இதை செய்தபோது, அப்போது என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். இப்போது இங்கே, மிகமிக சிறந்த குறிப்பிடத்தக்க ஒரு கருத்து இருக்கிறது. இதை நீங்கள் தவறவிட்டுவிட கூடாது என்று நான் விரும்புகிறேன். அந்த உடன்படிக்கையின் உறுதிப்பாடு, இதை வேறு வார்த்தைகளில் கூறினால், அது ஒரு வாக்குத்தத்தம், அதாவது, "நான் என்ன செய்கிறேனோ அல்லது நான் என்ன செய்வேன் என்று நான் கூறுகிறேனோ அதற்கு நான் உண்மையுள்ளவராயிருக்கிறேன்," என்று தேவன் அதை ஆபிரகாமுக்கு உறுதிப்படுத்தினார். 95. அவன் அந்த பலிகளை எடுத்து, அவைகளை கொன்று, அவைகளை கீழே வைக்கையிலே, அவைகளை ஒருசேர ஒருமுனையிலும் மறுமுனையிலும் வைத்துவிட்டு; பறவைகள் அதனிடம் வராதபடி பார்த்துக்கொண்டான், எனவே சாயங்கால நேரத்தில், சூரியன் அஸ்தமிக்கிற வரைக்கும் அந்த இரத்தம் சொட்டுகிற இறைச்சியின் (fresh meat) மீது பறவைகள் வந்து இறங்காமல் இருக்கும். சூரியன் அஸ்தமிக்கிற போது, அல்லது அஸ்தமித்துகொண்டு இருந்தபோது, எதிர்காலத்தில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை, என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் ஆபிரகாமுக்கு காண்பித்தார். 96. கவனியுங்கள், அவர் ஆபிரகாமிடம் கூறினார்: அவன் முதலில் பார்த்தது என்னவென்றால், திகிலும் காரிருளும் அவனை மூடிகொண்டது. முதலாவதாக, அவனுக்கு அயர்ந்த நித்திரை வந்தது. இப்போது, அந்த நித்திரை ஒட்டு மொத்த மனித இனத்துக்கான மரணத்தை சுட்டிக்காட்டியது. ஒவ்வொரு மனிதனும் மரிக்க வேண்டும்; முழு மனித இனத்துக்கான மரணம். அந்த நித்திரை அவனுக்கு வந்தது; அதற்கு முன்பாக ஒரு -ஒரு -ஒரு மிகுந்த காரிருள் (horror of blackness) சென்றது; அடுத்ததாக அக்கினி சூளை (fumrnace of fire) சென்றது; அதன்பின்பு ஒரு சிறு அக்கினி ஜூவாலை (burning light) அந்த உடன்படிக்கையின் நடுவாக, அந்த பலிகளுக்கு நடுவாக சென்றது அதை பிரித்தது. இப்போது அதின் அர்த்தம் என்ன? - ஒவ்வொரு மனிதனும் மரித்து, நிஜமாகவே மரித்ததிற்கு பிறகு, நரகத்திற்கு செல்ல பாத்திரனாயிருக்கிறான் என்பதே அதின் அர்த்தம். அது உண்மை, தேவனை விட்டு பிரித்து, இருளுக்கு, புறம்பான இருளுக்கு. ஆனால் அந்த வெளிச்சம் உள்ளே வந்தது, உள்ளே நடுவாக சென்று அந்த பலிகளை பிரித்தது. நீங்கள் புரிந்துகொண்டால், நாம்... அந்த உடன்படிக்கை! 97. அமெரிக்கர்களாகிய நம்மைப் போல, நாம் எப்படி உடன்படிக்கை செய்கிறோம்? நல்லது, நாம் செய்யும் முதல் காரியம், நாம் ஒருவிதமான வர்த்தக ஒப்பந்தத்தையோ அல்லது ஏதோவொன்றை செய்யப்போகிறோம் என்று நாம் கூறுவோம், நாம் வழக்கமாக வெளியே சென்று சாப்பிடுவோம்; பின்பு அமர்ந்து, சிறிது நேரம் பேசி, நம்முடைய ஒப்பந்த விதிமுறைகளை கொடுப்போம்; அதன்பின் ஒருவருடன் ஒருவர் கைகளை குலுக்குவோம். "கைகுலுக்கலாம்" என்று நாம் கூறுவோம். அதுதான் நம்முடைய உடன்படிக்கை. அதுதான் நம்முடைய வாக்கு. 98. இப்போது, ஜப்பானில், அவர்கள் ஜப்பானில் எப்படி உடன்படிக்கை செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்களும் சாப்பிடுவதற்கு ஏதாவதொன்றை கொண்டிருப்பார்கள்; பின்பு அவர்கள் ஒரு சின்ன உப்பு ஜாடியை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் உப்பை வீசுவார்கள். அதுதான் அந்த உடன்படிக்கையின் உறுதிப்பாடு. 99. நாம் கைகளை குலுக்கி, "தோழனே, இது முத்திரிக்கப் பட்டுவிட்டது. நான் இதை நம்புகிறேன். நான் உன்னோடு நிலைத்திருப்பேன். இது வாக்குறுதி" என்போம். 100. ஜப்பானியர்கள், ஜப்பானில், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் உப்பை வீசுவார்கள். "நண்பனே, இது முத்திரிக்கப் பட்டுவிட்டது. அதுதான் இதின் முடிவு." அப்படியானால் எல்லா மோதல்களுக்கும் அதுதான் முடிவு. அவர்கள், அவர்கள் உடன்படிக்கையை செய்து, ஒருவர் மீது ஒருவர் உப்பை வீசுவதன் மூலம், அதை உறுதிப்படுத்தினார்கள். 101. ஆனால் பழங்காலத்தில்... (இதில் ஒன்றை நான் எடுத்துக்கொள்ளலாமா?) [சகோதரன் பிரன்ஹாம் ஒரு காகித துண்டை எடுக்கிறார்] பழங்காலத்தில், இந்த விதத்தில் தான் அவர்கள் உடன்படிக்கையை செய்தார்கள். நாம் ஒரு ஒப்பந்தத்தை வரையறுத்து, நாம் ஒப்பந்தத்தை எடுத்து, அப்படியாக அதை எழுதினோம். பின்பு, நாம் பலியாக ஒரு மிருகத்தை கொன்று; துண்டங்களாக அதை பிரித்து, ஆபிரகாமின் காலத்தில் இருந்ததை போல அதை வைத்தோம். அதன்பின் இந்த உடன்படிக்கைக்கு நடுவாக நாம் நின்று, நீயும் நானும், தேவனுக்கு வாக்குறுதி கொடுத்தோம். "நாம் இந்த உடன்படிக்கையை காத்துக்கொள்ளாமல் போனால், நம்முடைய இடத்தில் மரித்த அந்த இறந்த பலிகளை போல் நாம் இருப்போமாக. அந்த பலியின் இரத்தம் நமக்கு பதிலளிக்கட்டும். நாம் அந்த உடன்படிக்கையை காத்துக்கொள்ளாமல் போனால், நாமும் அதே போல மரிப்போமாக." 102. பின்பு அது முழுவதுமாக வரையப்படுகிறது, அல்லது அதுபோன்றதான ஒரு பத்திர துண்டில் எழுதப்படுகிறது. அடுத்ததாக அது அப்படியாக, இரண்டாக கிழிக்கப் படுகிறது. [சகோதரன் பிரன்ஹாம் காகிதத்தை இரண்டாக கிழிக்கிறார்) நீ ஒரு பாதியை வைத்துக்கொள், நான் ஒரு பாதியை வைத்துக்கொள்கிறேன். இப்போது, நீங்கள் பாருங்கள், உங்களால் அதை எவ்விதத்திலும் போலியாக்கவே முடியாது, குறிப்பாக அது ஆட்டுத்தோலில் எழுதப் பட்டிருக்கும்போது. பாருங்கள், உங்களால் அதை போலியாக்கவே முடியாது. அதை முழுமையாக்க, இது அதோடு கூட கட்சிதமாக பொருந்த வேண்டும். பின்பு நாம் ஒன்றாக கூடிவரும்போது, நான் ஒரு பாகத்தை கொண்டு வருகிறேன், நீ மறுபாகத்தை கொண்டுவருகிறாய். அப்போது நாம் ஒன்று கூடும்போது, இந்த உடன்படிக்கையானது செய்யப்படவேண்டும், நம்முடைய வாக்குறுதி நிறை வேற்றப்படவேண்டும், அப்போது என்னுடைய காகித துண்டு உன்னுடைய காகித துண்டோடு கட்சிதமாக பொருந்த வேண்டும், ஆகையால் அந்த உடன்படிக்கையில் என்னோடு இருப்பது நீ மட்டும்தான். 103. தேவன் தாமே மாம்சமாகும்படி கீழே இறங்கி வந்து, அந்த உடன்படிக்கையில் அவரே இருக்கபோகிறார் என்பதைத்தான் தேவன் தாம் செய்ததில் காண்பித்துக் கொண்டிருந்தார். தேவன் கிறிஸ்துவை எடுத்து (ஆவியானவர் (Spirit); தேவனாகிய யேகோவா) கிறிஸ்துவை சிலுவையிலே எடுத்து, அவர் அவரை இரண்டாக கிழித்தார் (tore). அவருடைய ஆத்துமாவை அவர் கிழித்தெடுத்து (ripped), அதை உன்னதத்திலே வைத்துவிட்டு, அந்த சரீரத்தை எடுத்து, அதை கல்லறையிலே வைத்தார். உயிர்த்தெழுந்த காலை வேளையிலே, அந்த சரீரத்தை மேலே எழுப்பி, அவர் மீது இருந்த அந்த ஆவியை (Spirit), சபை மீது இருக்கும்படியாக திரும்ப அனுப்பினார். அது, இந்த கடைசி நாட்களில் இருக்கும் மாறாத உறுதிப்பாடாயிருக்கிறது, "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்," அந்த அதே உடன்படிக்கை ஜனங்களில் இருக்க வேண்டும். 104. அதை நீங்கள் எவ்வாறு கல்வியின் மூலம் பெறப் போகிறீர்கள்? இன்றிரவு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து உன்னதத்திலுள்ள மகத்துவத்தில் உட்கார்ந்திருக் கும் ஜீவிக்கிற, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாடல்லாமல் வேறெந்த வழியில் நீங்கள் அதை பெறப்போகிறீர்கள்? அவர் மீது இருந்த அந்த அதே ஆவி, இந்த கடைசி நாட்களில், ஆபிரகாமின் இராஜரீக வித்தின் மீதும் இருந்து, அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவ ராயிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி, நிரூபித்து கொண்டிருக்கிறது. ஆமென். அது உங்களை பக்தி பரவசமடைய செய்கிறது, ஆம் தானே? அந்த அதே உடன்படிக்கையில், இதோ அது இருக்கிறது, "என் உடன்படிக்கையை அவர்கள் இருதயத்தின் மீது எழுது." இயேசு, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்" என்றார். 105. இன்னும் சில நிமிடங்களில், நாம் இங்கே சோதோமிடம் வருகிறோம், அது எவ்வாறு இருக்கிறது, அது அங்கே எவ்வாறு நடந்தது, சரியாக எப்படி அந்த வாக்குத்தத்தம் கடைசி நாளுக்கென்று இருக்கிறது என்றும் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதையும் கவனியுங்கள். 106. அவர் அதை உறுதிப்படுத்தினார், காண்பித்தார் அதாவது அவர்... அவர் இயேசுவின் சரீரத்தை வெவ்வேறாக கிழித்து, ஆவியை (Spirit) எடுத்துவிட்டு, சரீரத்தை தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்திற்கு உயர்த்தினார்; இன்னொரு பாதியை கீழே அனுப்பினார், அவர் கிழித்து வெளியே எடுத்த அந்த பாதி, அது நம் மீது இருக்கும் அந்த ஆவியாயிருக்கிறது (Spirit), அது பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துவில் இருந்த அந்த அதே ஜீவன் உனக்குள் இருக்கிறது, அதுதான் அவர் உன் மீட்பர் என்பதை காண்பிக்கிறது. அவர் உன்னை தேவனுடைய சுவிகாரபுத்திரனாக்கிக்கொண்டார் (adopted), எனவே இப்போது நாம் கிறிஸ்துவின் ஆவியோடு தேவனுக்கு குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். ஆமென். 107. "நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள். ஆமென். 108. அவரில் இருந்த அந்த ஆவி (Spirit), நித்திய ஜீவன், உங்களில் இருக்கிறது. நித்திய ஜீவனை கொடுக்கிறவர் அவர்தான். மனித இனத்தின் வீழ்ச்சியில் விழுந்து போனதை, தேவனிடம் மீண்டும் கொண்டு வர, மீண்டும் கொண்டுவரும்படியாக, அவர் மீட்பராயிருக்கிறார். கிறிஸ்துவில் இருந்த அந்த ஆவி (Spirit) உங்களில் இருக்கிறது. டில்லனின் ஆவி என்னில் இருந்தால், நான் துப்பாக்கிகளை வைத்திருந்திருப்பேன். ஒரு ஓவியனின் ஆவி என்னில் இருந்தால், நான் படங்களை வரைந்திருப்பேன். கிறிஸ்துவின் ஆவி (Spirit) உங்களில் இருந்தால், கிறிஸ்துவின் கிரியைகளை நீங்கள் செய்வீர்கள். ஆமென். அது உண்மை. அவரில் இருந்த ஜீவன் உங்களில் இருக்கிறது. 109. ஒன்றிலிருக்கும் ஜீவனை இன்னொன்றிற்கு மாற்றுங்கள். உங்களால் பூசணிக்காயின் ஜீவனை எடுத்து, அதை தர்பூசணி கொடியில் போடமுடிந்தால், அது பூசணிக்காய் களைதான் விளைய செய்யும், நிச்சயமாக. ஒரு பீச் மரத்தின் ஜீவனை நீங்கள் வெளியே எடுத்து, அதை ஒரு பேரிக்காய் மரத்தில் போட்டால், அது பீச்களை தான் விளைய செய்யும், ஏனெனில் மரத்தில் இருக்கும் ஜீவன்தான் அதற்கான அத்தாட்சியை தருகிறது. 110. அவ்வாறுதான் இராஜரீக வித்துமிருக்கிறது; ஈசாக்கின் மூலமாக வந்த இயற்கையான வித்து, அதை நிராகரித்து விட்டது. சிலுவை போன்ற குறுக்கீட்டில் (In the cross), அது எப்பிராயிமிலிருந்து மனாசேக்கு இடம் மாற்றப்பட்டது (transferred), வலது கையிலிருந்த ஆசீர்வாதம் இடதுகைக்கு; அல்லது இடது கைக்கு உரியது இடதிற்கே இருந்தது, இளையவனிலிருந்து மூத்தவனுக்கு; அதன் மூலமாக முழு சூழ்நிலையுமே, கிறிஸ்துவை புறக்கணித்த ஈசாக்கின் இயற்கையான வித்திலிருந்து திருப்பப்பட்டது, இயற்கையான சபை இன்றைக்கும் அவரை நிராகரிக்கிறது. 111. ஆனால் விசுவாசிக்கிற தேவனுடைய ஆவிக்குரிய இராஜரீக வித்தானது, ஆபிரகாமின் இராஜரீக வித்து தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறது, ஜீவிக்கிற, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் உறுதிபாடு அவர்களில் இருக்கிறது. ஆமென் ஆமென். ஓ, என்னே! பாருங்கள், அதே காரியம் தான் இது, முழு சபையும் உறவின்முறையாக (relation) இருக்க வேண்டும். 112. இயற்கையான வித்தில் அது மாதிரியாக (typed) இருந்த போது, கவனித்துப்பாருங்கள், முதலில் ஈசாக்கும் ரெபெக் காவும் உறவினர்களாக இருந்தார்கள் (cousins), இரத்த சம்பந் தமான உறவுமுறையாக, ஒரே தந்தைகள்; பாருங்கள், தந்தைகள் சகோதரர்களாக இருந்ததால், அது அவர்களை, மண வாளனையும் மணவாட்டியையும் இரத்த சம்பந்தமான உறவுமுறையாக்கியது (cousins). 113. மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின், தொடக்கத்தில், முழுவதும் ஆதாம்தான். தேவன் அவனுடைய பக்கவாட்டி லிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, ஒரு ஸ்திரீயை உண்டாக்கி, ஆதாமிலிருந்த பெண்தன்மை கொண்ட (feminish) ஆவியை எடுத்து, அதை ஸ்திரீயில் வைத்தார். 114. ஆதலால் ஒரு பெண் ஆண்தன்மையோடு (masculine) நடந்துகொண்டால், அங்கு ஏதோ... அங்கு எங்கோ ஓரிடத் தில் தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது (perversion). ஒரு ஆணும் மிகவும் பெண்தன்ம கொண்டவனாக (big sissy) இருக்க விரும்பினால், அங்கு எங்கோ ஓரிடத்தில் ஏதோவொன்று தவறாயிருக்கிறது. தேவன் ஒரு ஆணை உண்டாக்கி, ஆணுக்கு ஆணுக்கான உடையையும், பெண்ணிற்கு பெண்ணிற்கான உடையையும் உடுத்துவித்தார். அவர்கள் எப்போதும் அந்த விதத்திலே நிலைத்திருக்கும்படி அவர் செய்கிறார். ஆமென். அவர்கள் வேறேதாவது ஒன்றை செய்வதை நீங்கள் பார்த்தால், அங்கு ஏதோவொன்று தவறாயிருக்கிறது. அது தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது (perverted). முழுவதுமே ஒரு கூட்ட தாறுமாறாக்கப்படுதலாகிவிட்டது. அது நிச்சயமான உண்மை. முழு இனமும், முழு சந்ததியுமே, அது, வேதாகமம் கூறுவது போல, "முழுவதுமே நொதிக்கிற இரணமாயிருக்கிறது." எங்கும் சுகமேயில்லை. அது உண்மை என்பது உங்களுக்கே தெரியும். அவர்களில் யாரையேனும் யாரையேனும்... நீங்கள் கண்டுபிடிப்பது கடினம், ஆனால் வீதிக்கு சென்று, ஒரு உண்மையான ஆண்மகனை (man) கண்டுபிடிப்பது கடினமாயிருக்கிறது; நான் பார்த்ததிலேயே மிகமிக பெண்தன்மைகொண்டவர்களாக இருக்கிறார்கள். பெண்கள், அவர்கள் பேன்ட்டுகளை (trousers) அணிந்துகொள்கிறார்கள், தங்களுடைய தலைமயிரை கத்தரிக்கிறார்கள், உதட்டு சாயத்தை பூசிக்கொண்டு, சிகரெட்டுகளை புகைத்து, ஒரு ஆணை போன்று இருக்க முயற்சிக்கிறார்கள். நீ எதற்காக ஒரு ஆணாக இருக்க விரும்புகிறாய்? நீ ஒரு சீமாட்டியாக இருக்க வேண்டுமே. 115. நான் ஒரு அடையாள குறியீட்டை, மதுபானக்கூடத்தில் (barroom) கண்டேன், "சீமாட்டிகளுக்கான மேஜைகள்" என்றிருந்தது. 116. நான் "உனக்கு வாடிக்கையாளர்களே இருக்கமாட்டார்கள்" என்றேன். ஒரு சீமாட்டி அது போன்ற ஒரு இடத்திற்கு செல்லவே மாட்டாள். இல்லை, ஐயா. இல்லை, ஒரு சீமாட்டி செல்லவே மாட்டாள். ஒரு பெண் வேண்டுமானால் செல்லலாம், ஆனால் ஒரு சீமாட்டி செல்ல மாட்டாள். அவள் அதுபோன்றதான ஒரு இடத்திற்குள் செல்லமாட்டாள். ஆனால் அதுதான் நிலை, பாருங்கள். 117. தேவன் வேறுபிரித்தார், வெட்டி... பாருங்கள், கிறிஸ்து வின் மணவாட்டியாகிய, அந்த சரீரம், அது சரியாக மீண்டும் முதலிற்கே வரவேண்டும். இப்போது ஏவாள்... 118. எது ஏவாள்? அவளும் ஆதாமும் ஒன்றே. அவர்கள் "ஆதாம்" என்றழைக்கப்பட்டார்கள். (தமிழ் வேதாகமத்தில் ஆதியாகமம் 5:2-ல் "மனுஷர் என்று பேரிட்டார்" என்று இருக்கிறது. ஆனால் ஆங்கில வேதாகமத்தின்படி பார்த்தால் "ஆதாம் என்று பேரிட்டார்" என்றுள்ளது]. அவர்கள் ஆவியாயிருந்தார்கள். முதன்முதலில், அவர் மனிதனை உருவாக்கியபோது, தன்னுடைய சொந்த சாயலில் அவனை அவர் உண்டாக்கினார். தேவன் ஆவியாயிருக் கிறார் (Spirit). "அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்." அவர்... அப்போது இன்னுமாக நிலத்தை பண்படுத்த மனுஷன் இருக்கவில்லை. அப்போது தேவன் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, இந்த இரட்டை ஆவியை (dual spirit) அவனில் வைத்தார், அதுதான் முதல் ஆதாம். 119. பின்பு அவர் ஏவாளை ஆதாமிலிருந்து பிரித்தபோது, ஏவாள் வார்த்தையை அவிசுவாசித்ததினிமித்தம் விழுந்து போனாள். அது சரி. அங்குதான் சபையும் இன்றைக்கு தோல்வியடைந்தது, வார்த்தையை அவிசுவாசிப்பதால்! 120. ஆனால் இந்த நிகழ்வில் (case), இராஜரீக வித்தோ, அழைக்கப்பட்டு, நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப் பட்டிருக்கிறது, ஆபிரகாமின் அந்த இராஜரீக வித்து, அவர்கள் வார்த்தையை விசுவாசிக்கிறார்கள். எது வந்தாலும் போனாலும், அவர்கள் எவ்வளவு சிரித்தாலும், யார் இதை, அதை அல்லது மற்றதை கூறினாலும் எனக்கு கவலை இல்லை, அவர்கள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டிருக்கிறார்கள். அவள் சரியாக மீண்டும் திரும்பி செல்கிறாள். அவளும், அவளின் நேசர் கிறிஸ்து வும் ஒன்றாயிருக்கிறார்கள். அந்த ஜீவன், கிறிஸ்துவிலிருக்கிற அந்த ஆவி (Spirit), சபையிலிருக்கிறது. இங்கே, அது தான் அவர்களுடைய நித்திய உடன்படிக்கை. பாருங்கள்? தேவன் கிறிஸ்துவின் அந்த ஆவியை (Spirit) எடுத்து, கல்வாரியின் பலியில், அதை தனியாக கிழித்தெடுத்து; அந்த ஆவியை (Spirit) எடுத்து, சரீரத்தை உயர்த்தி, அதை தேவனுடைய சிங்காசனத்திற்கும், உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலும் உட்கார வைத்தார். அதாவது, பரலோகத்திலுள்ள எல்லாமே அவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. பின்பு அவர் மேல் இருந்த அந்த ஆவியானது (Spirit), திரும்பி வந்தது; அந்த அதே ஆவி, இன்னொரு ஆவி அல்ல, இராஜரீக வித்திற்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி அந்த அதே ஆவி அவர் மீது வந்தது. 121. வேதாகமத்தின் படி, இந்த கடைசி நாட்களில் நாம் அதைப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். கிறிஸ்து வின் மணவாட்டி மேலே எடுக்கப்படுவதற்கு முன்னர், அதோடு கூட மிகமிக கட்சிதமாக பொருந்துகிற ஒரு ஊழியமானது இருந்தாக வேண்டும். ஆமென். இன்றிரவு, அதுதான் சத்தியம் என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்று கூறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆமென். கட்சிதமாக பொருந்தி, அந்த உடன்படிக்கையை உறுதிப் படுத்துகிறது! 122. அவர் அதை அங்கே உறுதிப்படுத்தினார், அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அவனுக்கு காண்பித்தார், அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். அங்குதான் அவர் அந்த உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு உறுதிப் படுத்தினார் என்பது எந்த வேதமாணாக்கனுக்கும் தெரியும். அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? இந்த பலிகளோடு, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை உருவகமாக (figure) காண்பித்துக்கொண்டிருந்தார். 123. இப்போது தாமதமாகிக்கொண்டிருக்கிறது, இந்த பலிகளை பிரிப்பதற்கு எனக்கு நேரமிருக்காது. அநேகமாக நாளை இரவு நான் அதைச் செய்வேன், ஆனால், கவனியுங்கள், அவை என்னவென்று, இந்த பலிகளுக்கான அர்த்தம் என்னவென்று காண்பிப்பேன். ஆனால், பாருங்கள், அவர் அதை உறுதிப்படுத்தினார், அதை இந்த கடைசி நாட்களில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்... 124. இப்போது, அவர்கள் அந்த விதத்தில்தான் உடன் படிக்கையை செய்தார்கள் என்பது, பூர்வ கால வரலாற்றை படித்த எவரும் அறிந்ததே. அவர்கள் அதை எழுதி, பின்பு அதை இரண்டாக கிழித்து கொடுத்தார்கள்; ஒருவர் ஒரு துண்டையும், இன்னொருவர் இன்னொன்றையும் எடுத்துக் கொண்டார்கள். ஒரு பலியின் மீது அவர்கள் மீண்டும் வந்து, தங்களுடைய பலியை செலுத்த வேண்டியிருந்தது. அதை தான் ஆபிரகாம் செய்தான்... கேராரிலும், மற்ற இடங்களிலும், அவன் சென்ற இடங்களில், அவர்கள் பலிபீடத்தில் செலுத்தி... தங்கள் பலிகளை பலியிட்டு, தங்கள் ஒப்பந்தங்களை செய்து, அதை அப்படியாக கிழித்தார்கள். தேவனும் அதே காரியத்தைதான் செய்தார், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அங்கே காண்பித்துக்கொண்டிருந்தார்...ஆ.. 125. கேள்வி என்னவென்றால், "எனக்கு நீர் வாக்களித்த புத்திரசந்தானம் (Seed) எங்கே - எங்கே? எங்கே? நான் எப்படி ஆகப்போகிறேன்? ஜனங்கள் என்னை பார்த்து நகைக்கிறார்கள், 'ஆபிரகாமே, ஜாதிகளுக்கு தகப்பனே, பதினைந்து வருடங்களாகி விட்டது. இப்போது உனக்கு எண்பத்தி - ஐந்து வயது, அல்லது - அல்லது தொண்ணூறு வயதாகிவிட்டது. உன்னுடைய எல்லா பிள்ளைகளும் எங்கே, எங்கே, எங்கே, எங்கேயிருக்கிறார்கள்? ஜாதிகளுக்கு தகப்பனே, இப்போது உனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?' என்று கேட்கிறார்கள். பாருங்கள், அவனை பரியாசம் பண்ணினார்கள். ஆனால் அவனோ தடுமாறவே இல்லை. அவன் அதோடு தரித்திருந்தான். "ஜாதிகளுக்கு தகப்பனே, இந்த நேரத்தில் உனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள், என்பதை இப்போது நாங்கள் பார்க்கட்டும்,?" என்று கூறி பரியாசம் பண்ணினார்கள். பாருங்கள், பரியாசம் பண்ண விரும்பினார்கள், ஏனெனில் அவர் எதை வாக்குத்தத்தம் பண்ணினாரோ அதை நிறைவேற்ற அவர் வல்லவராயிருக்கிறார் என்பதை விசுவாசித்ததால், அவன் தேவனுடைய வாக்குத்தத்தங்களை பற்றிப் பிடித்துகொண்டிருந்தான். அவரால் - அவரால் அதற்கும் அதிகமாக செய்ய முடியும். அவர்... 126. அவர் தனக்கான பலியை தாமே பார்த்துக்கொள்வார். அவர் யேகோவா-யீரேவாக இருக்கிறார். அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தாரோ அதற்கானதை அளித்து அதற் கான வழியையும் உண்டுபண்ண அவர் வல்லவராயிருக்கிறார். அவர் அதை எப்படி செய்யப்போகிறார் என்பதன் மூலமாக அந்த உடன்படிக்கையை அவர் அவனுக்கு உறுதிப்படுத்தினார், கிறிஸ்துவை எடுத்து, அவருடைய ஜீவனை அவரிலிருந்து கிழித்தெடுத்து, இந்த கடைசி நாட்களில் அதை கீழே ... மீது அனுப்பி. 127. இப்போது, இந்த வாரத்தில், ஆபிரகாமின் இராஜரீக வித்தோடு உறுதிப்பண்ணப்பட வேண்டிய இந்த உடன்படிக்கையானது, யூத ஜனங்களோடு அல்ல ஆனால் புறஜாதிகளினின்று வந்தவர்களோடு என்பதை உங்களுக்கு நிரூபித்துக்காட்டும்படி அதை நாம் வேதவாக்கியத்தில் முடிக்கப்போகிறோம், புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்துகொள்ளும்படி அதை அவருடைய நாமத்திற்காக தெரிந்துகொள்ளுகிறார். அவருடைய நாமத்தை கொண்டிருக்கும் சபையானது மீண்டுமாக அவருக்குள்ளாகவே வந்து சேரும், ஏனெனில் அதுதான் அவள், அவளுடைய ஜீவனாயிருக்கிறது. 128. கவனியுங்கள், பெந்தெகொஸ்தே நாளின்போது, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி விழுந்தபோது, அந்த ஜீவனானது சபைக்கு அளிக்கப்பட்டது. அந்த சபை உடனே வெளியே சென்று உற்பத்தி செய்தது, அந்த சபையை பின்தொடர்ந்து, அது என்ன செய்தது என்பதை அவர்கள் ஒரு அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகமாக எழுதினார்கள், ஏனெனில் அது அப்போஸ்தலர்களுக் குள்ளாக இருந்த கிறிஸ்து. 129. இப்போது இயேசு, பரிசுத்த யோவான் 15-ல், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்" என்று கூறினார். இப் போது, திராட்சச்செடி கனிகளை கொடுக்காது. கொடிதான் கனிகளை கொடுக்கும். அது திராட்சச்செடியினால் உர மேற்றப்படுகிறது (energized). நல்லது, இப்போது, அந்த மரத்திலிருந்து வெளியே வந்த அந்த முதல் கிளையானது, அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகத்தை பிறப்பித்ததென்றால்; அதிலிருந்து எப்போதாவது இன்னொரு கிளை வெளியே வந்தால், அதுவும் அதே ஜீவனாகதான் இருக்கும். 130. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, என்னுடைய நல்ல நண்பர், ஜான் ஷாரிட்டுடன், பீனிக்ஸில் நான் நின்று கொண்டிருந்தேன். உங்களுக்கு தெரியும், நான் டூசானில் வசிக்கிறேன். எனவே நான் பீனிக்ஸுக்கு சென்றிருந்தேன், சகோதரன் ஜான் ஷாரிட், அருமையான நல்ல கிறிஸ்தவ சகோதரன். அவர் மிகமிக, மிகவும் ஏழையாக இருந்தார், கர்த்தர் அவரை ஆசீர்வதித்தார். பல வருடங்களுக்கு முன்பு, நான் முதன் முதலில் பீனிக்ஸுக்கு சென்றிருந்தபோது, அவருக்கு பிள்ளைகளே இல்லை. அவர் பிள்ளைகள் வேண்டுமென்று விரும்பினார். அவர்கள், ஏழைகளாக, தெருவில் வேலை செய்து, ஒரு மணி நேரத்திற்கு சுமார் இருபத்தைந்து, முப்பத்தைந்து செண்டுகளுக்கு கான்க்ரீட் உடைத்தார்கள். அவர் அங்கே வந்து, செய்தியின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் விசுவாசித்தார். "எனக்காக நீங்கள் ஜெபிப்பீர்களா?" என்று கேட்டார். இப்போது அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். 131. அது, அதுமட்டும்மல்ல, கிறிஸ்துவுக்காக ஒவ்வொரு வருடமும் அவர் சுமார் மூன்றிலிருந்து நான்கு மில்லியன் டாலர்கள் கொடுக்கிறார். அது சரி. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, நான் இங்கே அவரோடு இருந்து, அவருடைய பருத்தி தோட்டத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அவர் ஒரு முழு ஜில்லாவையே (country) வாங்கியிருக்கிறார், ஆயிரத்து ஐந்நூறு மெக்சிக்கர்கள் அதைப் பராமரிக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, ஒரு மணி நேரத்திற்கு இருபத்தி ஐந்து செண்டுகளுக்கு கான்க்ரீட் உடைத்துக் கொண்டிருந்தார். 132. அவர் தன்னுடைய சிட்ரஸ் தோப்பிற்கு (citrus grove) என்னை அழைத்து சென்றார். என் ஜீவியத்தில் நான் பார்த்திராததும், பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும் மரத்தை அங்கு கண்டேன். அது ஒருவிதமான மரம், எல்லாவிதமான பழங்களையும் அது கொண்டிருந்தது. நான் பார்த்தபோது, அதில் ஆரஞ்சுகள் இருந்தன, அதில் எலுமிச்சைகள் இருந்தன, அதில் திராட்சைப்பழங்கள் இருந்தன, அதில் டேன்ஞ்சரீன்களும், டேன்ஜீளோக்களும் இருந்தன (tagnerines, tangelos - ஆரஞ்சு குடும்பத்தை சேர்ந்த பழங்கள்]. அங்கே ஒன்பது அல்லது பத்து வகையான பழங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன். "அது என்ன வகை யான மரம்?" என்று நான் கேட்டேன். 133. "ஓ,", "சகோதரன் பிரன்ஹாமே, அது வெறும் ஒரு சிறு பரிசோதனை" என்று கூறினார். 134. நான், "ஓ, எனக்கு புரிகிறது" என்றேன். நான், "அவை எல்லாம் அந்த ஒரே மரத்திலா ஜீவிக்கிறது" என்று கேட்டேன். நான், "முதலில், அது என்ன வகையான மரம்" என்று கேட்டேன். 135. அவர், "அது ஒரு ஆரஞ்சு மரம். அது ஒரு தொப்புள் ஆரஞ்சு (navel orange)" என்றார். 136. நான், "அப்படியா?" என்றேன், நான், "இந்த மற்ற நபர்கள் அதில் என்ன செய்கிறார்கள்" என்றேன். அவர்,"அதெல்லாம் அதில் ஒட்டுப்போடப் பட்டவை" என்று கூறினார். 137. நான், "ஓ, எனக்கு புரிகிறது." "நான் புரிந்து கொண் டேன்" என்று கூறினேன். நான், "இப்போது, இப்போது அடுத்த வருடம், எல்லாமே மீண்டும் ஆரஞ்சுகளாக ஆகிவிடும், ஆம் தானே?" என்று கேட்டேன். 138. "ஓ, இல்லை" என்றார், "இல்லை, எலுமிச்சை, எலுமிச்சையைதான் கொண்டு வரும்" என்றார். அவர் கூறினார், "அந்த... அந்த திராட்சைபழம் திராட்சைபழத்தை தான் கொண்டுவரும், டேன்ஞ்சரீன் ஒரு டேன்ஞ்சரீனைத் தான் கொண்டுவரும்." நான், "ஆரஞ்சு மரத்திலிருந்தா?" என்று கேட்டேன். அவர், "ஆம், ஐயா" என்றார். நான், "அதினால் அதை எப்படி செய்ய முடியும் என்பது எனக்கு புரியவில்லை" என்றேன். அவர், "அது எல்லாமே சிட்ரஸ் பழம்" என்றார். நான், நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஏதோவொன்றை நான் பார்க்கிறேன் என்றேன். 139. பாருங்கள்! ஓ, சகோதரனே, அந்த பரிசுத்த ஆவியானது அந்த திராட்சைசெடிக்குள் வந்து, தன்னுடைய திராட்சை செடியிலிருந்து அது முதல் கொடியை உற்பத்தி செய்த போது, அதற்கு பின்னாக அவர்கள் அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகத்தை எழுதினார்கள், அந்த மரமானது எப்போதாவது இன்னொரு கிளையை வெளியே தள்ளினதானால், அதுவும் அதையேதான் வளர செய்யும். அது இயேசு கிறிஸ்துவாக இருக்கும். இப்போது நம்மிடம் மெத்தோ டிஸ்டு, பிரெஸ்பிடேரியன், பாப்டிஸ்டு, லூத்தரன் என மற்ற எல்லாமே அதோடு ஒட்டுப்போடப்பட்டு, ஸ்தாபன கனியை தருகின்றன; ஆனால் அது எப்போதாவாது இன்னொரு கிளையை வெளியே தள்ளினால், அவள் அசலான, கிறிஸ்துவால் நிரப்பப்பட்ட, கிறிஸ்துவை மையமாக கொண்ட தேவனுடைய வார்த்தையாயிருப்பாள். 140. நினைவில்கொள்ளுங்கள், மணவாட்டி மரம் என்கின்ற செய்தி உங்களுக்கு நினைவிருக்கிறதா. உங்களில் அநேகர் ஒலிநாடாக்களை எடுத்து செல்லுகிறீர்கள். எப்படியாய் அந்த திராட்சத்தோட்டக்காரர் வந்து, அது தவறான வகை கனியை கொடுத்ததால் அவர் அதை வெட்டினார், அதை வெட்டினார், தொடர்ந்து அதை அடிவரை வெட்டினார், அடிவரை வெட்டினார். ஆனால் யோவேல், "பச்சைப்புழு விட்டதை, முசுக்கட்டை பூச்சி தின்றது; பச்சை-... முசுக் கட்டை பூச்சி விட்டதை, வேறேதோவொன்று தின்றது" என்றான். அந்த பூச்சிகள் எல்லாமே ஒரே பூச்சிகள்தான் என்றும், வெறும் வெவ்வேறு கட்டங்களில் இருப்பவை என்பதையும் நாம் கண்டோம். லூத்தரன் விட்டத்தை, மெத்தோடிஸ்டு தின்றது; மெத்தோடிஸ்டு விட்டதை, பாப்டிஸ்டு தின்றது; பாப்டிஸ்டு விட்டதை, பெந்தெகொஸ்தேயினர்கள் தின்றார்கள். அது முழுவதுமே வெட்டி கீழே போடப்பட்டது. 141. ஆனால் தேவன் கூறினார், "அந்த எல்லா வருஷங் களின் பலனையும், நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார். நான் மீண்டும் இன்னொரு சபையை, கடைசி நாட்களில் அனுப்புவேன். அந்த மூல வல்லமையை நான் மீண்டுமாக திரும்ப அளிப்பேன். நான்... சாயங்காலத்திலே வெளிச்ச முண்டாகும்." எத்தனை கிளைகள் கத்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மரத்தின் இருதயத்தின் உள்ளேயிருந்து, ஆபிரகாமின் இராஜரீக வித்து வெளியே வரும்! அல்லேலூயா! தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணினார். தேவன் அதை செய்வார். தாம் அதை செய்வதாக அவர் கூறியிருக்கிறார். "ஸ்தாபனங்கள் தின்ற எல்லா வருஷத்தின் பலனையும் நான் திரும்ப அளிப்பேன். எல்லா வருஷத்தின் பலனையும் நான் திரும்ப அளிப்பேன். நான் காரியங்களை கத்தரித்துப்போட்டேன், ஆனால் இருந்தாலும் அதின் இருதயத்திலிருந்து ஒரு திராட்சச்செடியானது வரும். இரவும் பகலும் தேவனுடைய வார்த்தையில் தியானமாயிருக்கிறவன், அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தை போலிருப்பான், "கொள்கைகளையோ (creed) அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ அல்ல, "ஆனால் வார்த் தையில் இரவும் பகலும் தியானமாயிருக்கிறவன். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, இலையுதிராதிருக்கிற மரத்தை போலிருப்பான். அவன் தன் காலத்தில் தன் கனியை தருவான்." தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். 142. தேவன் கிழிக்கப்பட்டு, வெளியே இழுக்கப்பட்டு, வெட்டி பிரிக்கப்பட்டு, தன்னைத்தானே பிரித்து, தன்னைத் தானே பிரித்துக்கொள்கிறார். பரிசுத்த ஆவியானவர் பெந் தெகொஸ்தே நாளில் கீழே இறங்கி வந்தபோது அவர் அதையே தான் செய்தார். கீழே இறங்கி வந்த அந்த அக்கினி ஸ்தம்பம், அதுதான் இஸ்ரவேலை பின்தொடர்ந்தது, அதுதான் லோகாஸ், அதுதான் கிறிஸ்து என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது பெந்தெகொஸ்தே நாளில் கீழே இறங்கி வந்தபோது, அது என்ன செய்தது? அது தன்னைத்தானே பிரித்துக்கொண்டு, அக்கினி நாவுகளாக அங்கே இருந்த ஒவ்வொருவர் மீதும் அமர்ந்தது. தேவன் தம்மைத்தாமே ஜனங்களின் மத்தியில் பிரித்துக்கொள் கிறார். ஓ, சகோதரனே, கிறிஸ்துவில் இருந்த அந்த அதே ஆவியினால் நீ பிரிவினை இல்லாமல் இருக்க முடியும். 143. "நான் என் பிதாவினிடத்திற்கு போகிற படியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான், இதை பார்க்கிலும் பெரியதை [அல்லது இதை விட அதிகமாக என்பதுதான் சரியான மொழிப் பெயர்ப்பு]. இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னை காணாது, இருந்தாலும் நீங்களோ என்னை காண்பீர்கள், ஏனெனில் நான் [தனிப்பட்ட பிரதிப்பெயர் சொல்லினால்], நான் உங்களுடன், உங்களுக்குள், கடைசி காலத்தில், முடிவு பரியந்தம் இருப்பேன்." அதை செய்வதாக அவர் வாக்குத் தத்தம் பண்ணியிருக்கிறார். ஆபிரகாமின் வித்து, இப்போது அவர் இங்கே இருக்கிறார். அவர்... 144. சில நாட்களுக்கு முன்பு, நாம் இங்கேயிருந்து, அவருடைய உயிர்த்தெழுதலை, தேவன் அவரை உயிர்த்தெழ செய்தார் என்று கொண்டாடினோம். அதை நாம் சாட்சியாக கூறுகிறோம். அதை நாம் பாடுகிறோம். அவர் உயிர்த்தெழுவதற்கு முன்பு செய்ததை போல, அவர் காட்சி யளித்து அவர் செய்த ஏதோவொன்றை அவர் செய்யலாம், நாமோ அதை, "ஒரு குறிசொல்லுகிறவன், ஒரு பிசாசு, ஒரு பெயேல்சேபூல்" என்று கூறுவோம், அதை சபையிலிருந்து வெளியே துரத்தி விடுவோம். நாம் எந்த காரணத்திற்காக அதை செய்கிறோம்? வேதவாக்கியத்தை நிறைவேற்ற வேண்டுமே, அதாவது, லவோதிக்கேயா காலத்தில், வார்த்தையாய் இருக்கிற கிறிஸ்து, வெளியே தள்ளப்பட்டு, [சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார்] உள்ளே வந்து, தன்னைத் தானே வெளிப் படுத்தும்படி, எங்கேனும் கொஞ்சமாவது ஒத்துழைப்பு கிடைக்குமா என்று முயற்சித்து, கதவை தட்டிக்கொண்டு இருக்கிறார். 145. ஆனால் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி முழு நிச்சயமாக, அங்கிருந்து ஒரு கிளை வெளியே வரும்! 146. நான் சகோதரன் ஷாரிட்டிடம், "அப்படியானால் அடுத்த வருடம் அதிலிருந்து என்ன வகையான கிளை வெளியே வரும்? அது ஒரு ஆரஞ்சாக இருக்குமா? அது ஒரு எலுமிச்சையாக இருக்குமா? இருக்குமா?" என்று கேட்டேன். 147 "ஆம், மூல முதலானதாக(original) இருக்கும்," என்று அவர் கூறினார். "அது தன்னிலிருந்து ஒரு கிளையை வெளியே விடும்போது, அது தொடக்கத்திலிருந்தது போலவே, அது ஒரு ஆரஞ்சாக இருக்கும்." 148. ஆபிரகாமின் அந்த உண்மையான, ஜீவிக்கிற வித்து வெளியே வரும்போது, இயேசு கிறிஸ்துவில் இருந்த அந்த அதே ஆவி (Spirit) அவர்களில் ஜீவிக்கும், ஒவ்வொரு வார்த்தையும் "ஆமென்" என்று ஆமோதிக்கப்படும். அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். "இது தேவஆவியின் ஏவுதல் (inspired), அது தேவஆவியின் ஏவுதல் கிடையாது" என்றல்ல. அவர்கள் முழுவதையும் விசுவாசிக்கிறார்கள், 'ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. 149. இன்றிரவு, நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோ டும் விசுவாசிக்கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன். 150. இப்போது நான் இங்கே வெகு நேரமாக பிரசங்கித்து வருகிறேன். நம்முடைய தலைகளை நாம் ஒரு நிமிடம் தாழ்த்தலாம். நான் இதை நாளை இரவு முடிக்கிறேன். நான் உங்களை தாமதப்படுத்த மாட்டேன் என்று உங்களுக்கு நான் வாக்கு கொடுத்தேன். 151. இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்... மாறாதவர், உறுதிப்படுத்தப்பட்டது, அது ஆபிரகாமின் எல்லா கேள்விகளையும் தீர்த்து வைத்தது, விசுவாசத்தினால் அவன் அதை கண்டபோது, அவிசுவாசத்தினால் தடுமாறாமல், தொடர்ந்து முன்னேறினான். அவன் தடுமாற வில்லை. இப்போது அவனுடைய இராஜரீக வித்தை குறித்து என்ன?, உரிமை கோருகிறவர்களாகிய நாம் (இந்த நாளின் கிறிஸ்தவர்களாகிய நாம்), அவர் பானம் பண்ணின அந்த அதே கோப்பையை (cup) முத்தமிட்டோம் என்று உரிமை கோருகிற நாம், அவருடைய அதே ஆவியை நம்மில் கொண்டிருந்து... அவர் நம்மோடு இங்கே இருப்பேன் என்று அவர் பண்ணின வாக்குத்தத்தம் உறுதிப்படுத்தப்படுவதை காண்பது, 152. வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்படி, அது அப்படியாக எல்லா காலங்களிலும் இருந்ததே கிடையாது. இதற்கு முன்பு அதை நாம் ஒருபோதும் கொண்டிருந்ததே இல்லை. வரலாற்றை தேடிப்பாருங்கள். அது ஒருபோதும் காட்சி யளித்ததே (appear) கிடையாது. இந்த கடைசி நாட்களில் அது எங்கே செல்ல வேண்டியிருக்கிறது? தெரிந்துக் கொள்ளப்பட்ட சபைக்கே. பாபிலோனுக்கல்ல, சோதோமுக்கல்ல; அவர்கள் அங்கே ஒரு செய்தியாளனை (a messenger) கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றிரவு, தெரிந்துக்கொள்ளப்பட்ட சபைக்கு பரிசுத்த ஆவியானவர் தான் அந்த செய்தியாளனாயிருக்கிறார் (the Messenger), தேவன் மனித மாம்சத்தில் வாசம்பண்ணி, தன்னை பகுத்தறிகிறவராக (Discerner), இருதயத்தின் நினைவுகளையும் யோசனை களையும் வகையறுக்கிற அந்த வார்த்தையாக, தன்னை காண்பித்துக் கொண்டிருக்கிறார். "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்." அவர் யேகோவா-யீரேவாக இருக்கிறார். நமக்கான பலியை அவர் ஏற்கனவே தந்து விட்டார், தன்னுடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த கடைசி நாட்களில், ஜனங்களோடு, தன்னுடைய உடன்படிக்கையை அவர் காத்துக் கொண்டு வருகிறார். 153. நண்பர்களே, இந்த இரவு முழுவதும் நம்மால் பேச முடியும். சொல்லப்பட்ட காரியங்கள், போதுமான அளவுக்கு சொல்லப்பட்டுவிட்டது. வியாதியாயிருக்கும் ஜனங்கள் இங்கே இருக்கிறார்கள்; உங்களுக்கு சுகமளித்தல் தேவையாயிருக்கிறது. நீங்கள் ஏன் அதை விசுவாசிக்கக் கூடாது? என்னால் உங்களை சுகமாக்க முடிந்தால், நான் அதை செய்வேன். ஜெபித்துக் கொண்டிருங்கள். என்னால் உங்களை சுகமாக்க முடிந்தால், நான் உங்களை சுகமாக்குவேன். என்னால் உங்களை சுகமாக்க முடியாது. நான்... நீங்கள் கவனித்தால்,முதல் அல்லது இரண்டு இரவுகள், நான் ஆராதனையை வியாதியஸ்தற்களுக்காக ஜெபிப்பதற்கென்று கொடுத்திருக்கிறேன். அது அதற்காக மட்டுமல்ல. இங்கே ஏதேனும் வித்து ஜீவனுக்காக நியமிக்கப்பட்டிருந் தால், பரிசுத்த ஆவியானவர் அதை பிடித்துக்கொள்வார். அவர்கள் அதை காண்பார்கள். அவர்கள் அதை அறிந்துக்கொள்வார்கள். இப்போது அவர்... 154. இங்கே இருப்பதில் எத்தனை பேர் தேவனுக்கு முன்பாக உங்கள் கைகளை உயர்த்தி, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை; அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றிரவு நம் மத்தியில் ஜீவித்து, நம் மத்தியில் இருக்கிறேன் என்று தம்மைத்தாமே அவர் காண்பித்துக்கொண்டிருப்பது, அது தேவனுடையது தான் என்பதை நான் என் முழு இருதயத் தோடும் விசுவாசிக்கிறேன்," என்று கூறுவீர்களா? உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தி, "அதை நான் உண்மையாக விசுவாசிக்கிறேன்" என்று கூறுவீர்களா? 155. இப்போது, பரலோக பிதாவே, அவர்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறார்கள். அவர்கள்... தாங்கள் ஆபிரகாமின் வித்துக்கள் என்று அவர்கள் உரிமை கோருகிறார்கள். அவர்களுக்கு - அவர்களுக்கு வேண்டும், அவர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்கள் வேண்டும். இப்போது நான், இந்த எளிய சிறிய வழியில் அவர்களிடம் கூறியிருக்கிறேன். நான் என் செய்தியை ஆரம்பித்தேன், ஆனால் அதை முடிக்கவில்லை. ஆனால், பிதாவே, ஆபிரகாமுக்கான உறுதிப்பாட்டில் அவர்கள் - அவர்கள் இங்கே காண்கிறார்கள், அதாவது நீர் அவனுக்கான வாக்குத்தத் தத்தை உறுதிப்படுத்தி, அவனுக்கு உறுதிப்பாட்டை அளித்தீர். இப்போது, கிறிஸ்துவின் ஆவி எங்களில் இல்லை யென்றால், பின்பு நாங்கள் கிறிஸ்துவினுடையவர்களல்ல. மேலும் கிறிஸ்துவின் சுபாவத்தை மாற்ற முடியாது. 156. அவர் நமக்கு மிக நன்றாக கூறி, வேதாகமத்தின் படி, பல இடங்களில் இந்த காரியங்களை நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். கடைசி நாட்களில் அது எவ்வாறு இருக்குமென்று, மல்கியா 4-ல் பழைய ஏற்பாடும்கூட அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறது, "பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திருப்புவான்," அதாவது பெந்தெகொஸ்தே பிதாக்களிடத்திற்கு, வேதாகமத்தின் மூல உபதேசத்திற்கு, மூல வார்த்தைக்கு, அதைதான் அது செய்யும். அங்கே ஒரு அடையாளமும் இருக்கும், இந்த அடையாளம் உறுதிப் படுத்தும்... அதை பின்தொடர்ந்து வருகிற சத்தத்தினாலே அது உறுதிப்படுத்தப்படும், அதாவது நீர் இங்கே இருக்கிறீர் என்று. நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். 157. இப்போது, பிதாவே, -- சாத்தான் வெளியே போகட்டும். கர்த்தாவே, எங்களுக்கு ஏதேனும் வல்லமை இருக்கிறது என்பதை நாங்கள் நாங்கள் விசுவாசிப்பதில்லை. வல்லமையிருக்கிறது என்று நாங்கள் உரிமைக் கோருவதில்லை. எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றுதான் உரிமைக்கோருகிறோம். 158. நாங்கள் உணருகிறோம், தலையில் ஒரு சிறு தொப்பியோடு, வீதியில் நிற்கும் அந்த சிறிய போலீஸ்காரர், அந்த பெருஞ்சாலைகளில், கார்களானது, முந்நூறு குதிரைதிரன் கொண்ட மோட்டார்களுடன், மணிக்கு தொண்ணூறு மைல்கள் வேகத்தில் சீறி பாய்ந்துகொண்டிருக்கும்போது, அதில் ஒன்றை கூட நிறுத்துவதற்கான வல்லமை அவருக்கில்லை. அவைகள் அவரை உடனே அடித்து நசுக்கிவிடும். ஆனால், அவர் அந்த பேட்ஜை (badge - காவல்துறை அடையாள சின்னம்] காண்பித்து, தன் கைகளை உயர்த்தட்டும், உடனே பிரேக்கு அடிக்கப்பட்டு, டையர்கள் கீச் என்று சத்தம் எழுப்பி நிற்கும். அதுதான் அதிகாரம். முழு நகரமுமே அவருக்கு பின்னாக இருக்கிறது. அவரிடம் வல்லமை இல்லை, ஆனால் அதிகாரம் இருக்கிறது. அவர் ஒரு நூறு பவுண்டுகள் எடை கூட இருக்கமாட்டார், ஆனால் அவர் அதிகாரத்தை பெற்றிருக்கிறார். 159. கர்த்தாவே, இன்றிரவும் அது அவ்வாறுதான் இருக்கிறது. நாங்கள் சாத்தானிடம் வல்லமையோடல்ல, ஆனால் அதிகாரத்தோடு, இரத்தத்தையும், உடன்படிக்கையின் உறுதிப்பாட்டையும் காண்பித்து வருகிறோம். இந்த வியாதியஸ்தர்களை பிடித்து வைத்திருக்க அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. 160. இங்கே, அவர்களை பார்க்கிறேன், அவர்கள் கடும் வேதனைப்படுகிறார்கள் என்பதை பார்க்கிறேன், தேவனே, எதாவது ஒரு வழியில், அவர்களுக்கு நான் செய்தியை கொண்டுபோக கூடுமானால்! அவர்கள் அதை பார்த்துவிட்டால் போதும், ஆண்டவரே, உணர்ந்து விட்டால் போதும்! ஆண்டவரே, அவர்களை எழுப்பும். இப்போது ஒரே முறை, இன்றிரவு, நீர் அந்த மாறாத தேவன் என்பதை அவர்கள் காணட்டும். உம்முடைய வார்த்தையை நீர் உறுதிப்படுத்துகிறீர். நீர் அதை எவ்வாறு வாக்குத்தத்தம் செய்தீரோ, அவ்வாறே நீர் அதை காத்துக்கொள்கிறீர். இந்த கடைசி நாட்களில், இந்த காரியங்கள் நடக்கும் என்று நீர் கூறினீர், "மனுஷ குமாரன் வெளிப்படும்போது," இந்த காரியங்கள் எல்லாம் நடக்கும் என்று. கர்த்தாவே, அதை அருளும், அது நீர்தான் என்பதை அவர்கள் காணட்டும். இயேசுவின் நாமத்தால் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 161. நண்பர்களே, இப்போது விசுவாசியுங்கள். நீங்கள் ஒரு மிகவும் அருமையான ஜனக்கூட்டம். எனக்கான நேரத்தை நான் கடந்துவிட்டேன், பாருங்கள், அப்படி செய்யவேண்டு மென்று நான்-நான் எண்ணவில்லை. நான் அவர்களிடம் கூறினேன் நான்... இன்றிரவு, நாம் சரியான நேரத்திற்கு வெளியே சென்றுவிடலாம் என்று, ஆனால் நான் அதை தவறிவிட்டேன் ஏனெனில் நான்... என்னுடைய செய்தியை, கர்த்தருக்கு சித்தமானால், நாளை இரவு நான் முடிக்கிறேன். 162. இப்போது நாம் இங்கே இருக்கிறோம். நீங்கள் ஜனங்களாயிருக்கிறீர்கள். நாம் அனைவரும் மனித இனமாயிருக்கிறோம். நாம் வாழ விரும்புகிறோம். அனைவருமே தங்களுக்கான காலத்தை வாழ விரும்புகிறார்கள். நாம் வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் - நான் அதை விசுவாசிக்கிறேன். இப்போது, அதற்கு காரணம் கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லை என்பதனாலல்ல. 163. "ஏன், பின்னை ஏன்? கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ?" என்று ஒரு முறை கூறப்பட்டிருக்கிறது, என்று உங்களுக்கு தெரியும். 164. "அங்கே தீர்க்கதரிசி இல்லையோ?" என்று ஏசாயா கூறினான், இல்லை, எலியா கூறினான் என்று நான் சொல்ல வந்தேன். "சென்று அவனிடம் கேள், இஸ்ரவேலில் தீர்க்கதரிசி இல்லையோ? நீ ஏன் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்திற்கு போகிறாய் ? ஏன், எதற்காக நீ அங்கே செல்கிறாய்?", 'நீ ஒரு யூதனாய் இருக்க, நீ ஏன் அங்கே செல்கிறாய்?" 165. "கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ இரண வைத்தியனும் அங்கே இல்லையோ?" அங்கே... அதுதான் காரணமா? என்று கேட்டான். 166. அதுதான் காரணமா? இல்லை, ஐயா. நம்மிடம் தைலம் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். ஆம், ஐயா. வாக்குத்தத்தம் நம்முடையது. இப்போது நீங்கள் அதை விசுவாசித்தால் மட்டும் போதும். நீங்கள்... 167. ஜனங்களின் சிந்தையானது மிகவும் சிதறடிக்கப்பட்டு இருக்கிற நாள் இது, அவர்கள்... அவர்களுக்காக நான் வருந்துகிறேன். எதை விசுவாசிப்பது என்றே அவர்களுக்கு தெரிவதில்லை. ஒருவன் இதைச் சொல்கிறான், இன்னொரு வன் அதைச் சொல்கிறான். "எல்லா மனுஷரும் பொய்யர், நானே சத்தியபரர்" என்று தேவனாகிய கர்த்தர் கூறினார். அது சரி. இப்போது அவரால் தன் சுபாவத்தை மாற்ற முடியாது. 168. இப்போது, கடந்த இரவு நாம் ஒன்றாம் ஜெப அட்டையை ஆரம்பித்தோம் என்று நான் நம்புகிறேன்(ஆம் தானே?), சுமார் இருபது வரை அல்லது அதுபோன்றதை அழைத்தோம். ஹுஹ்? நாம் அந்த செயல் முறையை மாற்றலாம். நாம் எந்த ஜெப அட்டையையுமே கொண்டி ருக்க வேண்டாம். ஆம், நீங்கள் அப்படியே ஜெபியுங்கள். உங்களுக்கு தெரியும், ஜெப அட்டையானது உங்களை இங்கே மேலே மட்டும்தான் கொண்டுவரும். 169. ஆனால் நான் அவருடைய பிரசன்னத்தை உணருகி றேன், எனவே அவர் இங்கே இருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அந்த கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை எத்தனை பேர் எப்போதாவது பார்த்திருக் கிறீர்கள்? எனவே எனக்கு உதவுங்கள், நான் உங்களை நியாயத்தீர்ப்பிலே சந்திக்கும்போது, நான் இங்கே நிற்கிற இடத்திலிருந்து அது இரண்டடி தூரத்தில் கூட இல்லை. அது சரி. அது இங்கேயிருக்கிறது. 170. இப்போது ஜெப அட்டைகள் இல்லாமல் யாராவது இருந்தால், உங்கள் கையை உயர்த்தி, "என்னிடம் ஜெப அட்டைகள் இல்லை, இருந்தாலும் நான் வியாதியோடும், தேவையோடும் இருக்கிறேன்" என்று கூறுங்கள். நல்லது, எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். எல்லாம் சரி. 171. இப்போது நான் உங்களிடம் கூறுகிறேன். அந்த தூதனானவர் அந்த நேரத்தில் அங்கே என்ன செய்தார்? ஆபிரகாம் தன் முதுகுக்கு பின்புறமாக இருக்கும்படி, அவர் தன் முதுகை திருப்பியிருந்தார். அதைக்குறித்து, இன்றிரவு, நான் பேசவேண்டுமென்று இருந்தேன், ஆனால் பேசவில்லை. அவர் இவ்வாறாக கூறியதையும், "சோதோமிலே நடந்தது போல, கர்த்தருடைய வருகையிலும் நடக்கும்." நாம் காண்கிறோம், அந்த கூடாரம் அவருடைய முதுகுக்கு பின்புறமாக இருக்கும்படி அவர் தன் முதுகை திருப்பி இருந்தார். அவர் கூறியதை குறித்து சாராள் நகைத்தாள், ஏனெனில் அவர் அவனிடம் கூறியிருந்தார். அதாவது அங்கே வெறும் ஒரு சாதாரண மனிதனாக வெளியே இருந்து, அவள் வறுத்துகொடுத்த கறியை புசித்து, பசுவின் பாலை குடித்து, அதின் கன்றை புசித்துக்கொண்டிருந்தவர், தேவன் என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. 172. வேதாகமம் அது தேவன் தான் என்று கூறுகிறது. ஆபிரகாம் அது, "ஏலோஹிம்" என்றான். அது சரி. "ஏலோஹிம்", தேவன். அவர் ஆபிரகாமுக்கு முன்பாக மறைந்துபோனார். "தேவன்," தன்னை, "தேவனாகிய கர்த்தர், ஏலோஹிம், எல்லாவற்றிற்கும் போதுமானவர்" என்றழைத்தார். 173. "ஆதியிலே," அதே வார்த்தைதான் பயன்படுத்தப் பட்டது. எந்த பண்டிதருக்கும்(scholar) அது தெரியும். "ஆதியிலே தேவன்..., எபிரெயத்தில் பார்த்தால், "ஏலோஹிம்" என்றிருக்கும். 174. "தேவனாகிய கர்த்தர், ஏலோஹிம்" என்று ஆபிரகாம் கூறியபோது கவனியுங்கள் ஆபிரகாமின் சந்ததிக்கு, உடன்படிக்கையை உறுதிப்படுத்தவும், அவர் செய்த அதே கிரியை செய்யவும், (பார்க்க முடிகிறதா?) அவர் அங்கே செய்த அதையே செய்யவும், தேவன் மனித சரீரத்தில் தன்னை வெளிப்படுத்துவார் என்பதை அதே மனிதன், அதே நபர் காண்பித்துக் கொண்டிருந்தார். அவர் எப்போ துமே இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிற ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறார். ஏனெனில், "தேவனுடைய வார்த்தை இருதயத்திலுள்ள நினைவுகளை வகையறுக்கும்" என்று வேதாகமம் கூறுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 175. இப்போது, இன்றிரவு தேவன் இங்கே இருந்து குறைந்தது மூன்று நபர்களை எடுத்துக்கொண்டால். இப்போது இது ஒரு சவால். இது உண்மையில்லை என்று நினைப்பவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் வந்து இதை செய்யட்டும். அவர்களால் இதை செய்ய முடியவில்லையென்றால், பின்பு இதை பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கட்டும். பாருங்கள்? இப்போது, கவனியுங்கள், குறைந்தது மூன்று நபர்களை எடுத்துக் கொள்கிறேன், (மூன்று என்பது உறுதிப்பாடாயிருக்கிறது), அவர்கள் முற்றிலும் அந்நியர்களாயிருக்கிறார்கள், மேலும் பரிசுத்த ஆவியானவர்... நீங்கள் விசுவாசித்தால் போதும், நான் கேட்பதெல்லாம் அவ்வளவுதான் நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதுதான், செய்யவேண்டியது என்னவென்றால், இந்த வேதாகமம்தான் சத்தியம் என்பதையும், நாம் கடைசி நாட்களில் ஜீவிக்கிறோம் என்றும், இந்த வாக்குத்தத்தம் கடைசி நாட்களுக்கானது என்றும் விசுவாசிப்பதே. 176. நினைவில்கொள்ளுங்கள், வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட குமாரன் காட்சியில் வரும்வரை, ஆபிரகாமோ அல்லது, வேறு யாருமே வேறு எந்த அடையாளத்தையும் பார்க்கவில்லை. ஆபிரகாம் அதுவரை, எல்லாவிதமான அடையாளங்களையும், காரியங்களையும் பார்த்தான், ஆனால் அதுதான் கடைசி அடையாளமாயிருந்தது. தேவனுடைய தொடர்ச்சியை அவர் ஒருபோதும் உடைக்கவே மாட்டார். ஆபிரகாமின் வித்து, அதுதான் அவர்களுக்கான கடைசி அடையாளம். பாருங்கள்? அதுதான் கடைசி... தேவன்... அது ஏலோஹிம் என்பதை அப்போதே அவன் அறிந்திருந்தான். இயேசுவும் மீண்டும் வந்து, அது அந்த வழியில்தான் இருக்கும் என்றார், நாம் இதோ இங்கே இன்றைக்கு சரியாக அதே காரியத்தில்தான் இருக்கிறோம். 177. ஜனங்களே, இதுதான் சத்தியம். "இந்த சிறு கொட்டகையிலா (ban)?" என்று நீங்கள் கேட்டீர்கள் என்பதை நான் அறிவேன். நல்லது, அது எப்போதுமே அந்த வழியில்தான் இருந்துவருகிறது. அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். அவரை விசுவாசிப்பவர்கள் என்று யாரும் இருப்பது அரிதே. ஆனால் ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்ட அந்த வித்து மாத்திரமே விசுவாசித்தது, யாவும். "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். " அது சரி. அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை; அவர்களுடைய பெயர்கள் அங்கே இருக்கிறது, அவர்கள் அதை காண்பார்கள். எவ்வாறு? அவர்கள் அதை காண்பார்கள். 178. இப்போது, பாருங்கள், யோசனை மாத்திரமே. நான் - நான் ஜெபித்து, உங்கள் மீது கைகளை வைக்க முடியும். குறிப்பாக ஞாயிற்று கிழமை மதியத்தில் அதை குறித்து நான் பேசப்போகிறேன். ஆனால் நீங்கள் அவர் மீது உங்கள் கைகளை வைக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். "நம்முடைய பலவீனமான உணர்வுகளால் தொடக்கூடிய பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார்." நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார், "ஆமென்" என்று கூறுகிறார்கள்] நீங்கள் அதை விசுவாசியுங்கள். இப்போது அவர் அதை செய்தால்... 179. இங்கேயிருப்பதில் சிலரை நான் - நான் அறிவேன். நான் அப்படியாக பார்த்தேன், என்னுடைய இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் அங்கே உட்கார்ந்து இருப்பதை நான் கண்டேன், அவர் ஒரு ஊழியக்காரர், அங்கே இருப் பதில் இரண்டு பேர். ஒருவர் தலையை கீழே தொங்க விட்டிருக்கிறார், கர்த்தர் அவருடைய சிறு பையனை, மூளை அதிர்விலிருந்து (concussion of the brain) சற்றே குணமாக்கினார், இருந்தாலும், இன்றைக்கு, என்னை தொலைப் பேசியில் அழைத்தார். 180. மேலும் - மேலும் அங்கேயிருக்கும் இன்னொரு மனிதன், அவருடைய சிறு குழந்தை, அன்றொரு நாள் இரவு, அது மரித்துவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள். நான் போமான்டில் (Beaumont) இருந்தேன். நாங்கள், அழைக்கப்பட்டு, அங்கே சென்றோம், அவர் தன் கையை என் மீது வைத்து, அழ ஆரம்பித்து, "சகோதரன் பிரன்ஹாமே, கர்த்தருடைய வார்த்தை உம்மிடம் இருக்கிறது. அவரிடம் கேளுங்கள்" என்றார். சரியாக அந்த நிமிடமே, அந்த சிறு குழந்தை ஜீவனுக்கு வந்து, திரும்பவும் உயிர்வாழ ஆரம்பித்தது. அதோ அந்த தகப்பன் அங்கே உட்கார்ந்திருக்கிறார், அவர் ஒரு ஊழியக்காரர். 181. மேலும் இந்த மனிதன், ஒரு கார் விபத்தில் சிக்கி, ஏதோவொன்றிற்குள்ளோ அல்லது எதற்குள்ளோ, ஒரு கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டார், அவருடைய சிறு மூளையையும் மற்றவைகளையும் சேதமடைந்தது. கர்த்தர் அவரை குணமாக்கினார், முற்றிலும் இயல்பாக ஆக்கிவிட்டார். அவர்கள் விசுவாசித்தார்கள், அவர்கள் முற்றிலுமாக... 182. இப்போது அதை செய்தது நான் என்று கூறாதீர்கள். அதில் நான் ஒன்றையுமே செய்யவில்லை. தேவன் மீது இருக்கும் அவர்களுடைய விசுவாசம்தான் அதை செய்தது. நீங்கள் விசுவாசத்தோடு இருங்கள்! எல்லாம்... 183. பரிசுத்த மாற்கு 11:22-ல், இயேசு கூறினார், "எதை வேண்டுமானாலும்! நீ இந்த மலையை பார்த்து, "பெயர்ந்து போ," என்று சொல்லி, நீ சொன்னபடியே நடக்கும் என்று உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீ என்ன சொன்னாயோ அது நடக்கும்." ஆனால் அதுதான் முக்கியமான காரியம், பாருங்கள். அது ஒரு நம்பிக்கையல்ல; அது "அதை அறிந்திருக்கிறேன்" என்பதாய் இருக்கிறது. 184. தான் உயிரோடிருக்கிறவர் என்பதை அவர் நிரூபித் தால், வாக்குத்தத்தத்தை பண்ணின அந்த ஒருவர், தான் உயிரோடிருப்பதை நிரூபிக்க முடிந்தால், உலகத்திலுள்ள வேறு எதாலுமே அதை செய்ய முடியாது. விழித்திடுங்கள்! உங்களை, உங்கள் ஆவியை மிகவும் நன்றாக குலுக்குங்கள். பாருங்கள்? தேவனை தவிர உலகத்திலுள்ள வேறு எதாலுமே அதைச் செய்ய முடியாது. 185. இப்போது, நீங்கள் வேண்டுமானால், நீங்கள் - நீங்கள் அதை பொல்லாதது (evil) என்று தீர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் அவரை பொல்லாதவர் (evil) என்றுதான் தீர்த்தார்கள், எனவே இன்னுமாக கூட அவருடைய ஆவியை (Spirit) அவர்கள் பொல்லாதது என்றே தீர்க்கலாம். அவர்கள், "அதைச் செய்கிற அவர், ஒரு பிசாசு" என்று கூறினார்கள். நல்லது, நிச்சயமாக, அவர்கள் அதற்குரிய பலனை அடைந்தார்கள். 186. நீங்கள் விசுவாசியுங்கள் போதும். உங்களால் குண மாக்க முடியாது. என்னால் குணமாக்க முடியாது. எந்த மனுஷனாலும் குணமாக்க முடியாது. தேவன்தான் குணமாக்குகிறவராயிருக்கிறார். 187. ஆனால் உங்களால் உணர்ந்துக்கொள்ள முடிந்தால், அதாவது நீங்கள் சேவிக்கிற அந்த ஒருவர், அவரை சேவிக்கும்படியாக நீங்கள் உலகத்தைவிட்டு உங்களை பிரித்துக்கொண்டீர்கள், நீங்கள் நேசிக்கிற அந்த ஒருவர்; நியாயத்தீர்ப்பில் நிற்கப்போகிற அந்த ஒருவர், அவரோடு கூட நீங்கள் நியாயந்தீர்க்கப்படும்படியாக, நியாயத்தீர்ப்பில் இருக்கப்போகிறீர்கள், அவருடைய பிரசன்னமானது சரியாக இங்கே வந்து, அவர் இங்கே இருக்கிறார் என்பதை காண்பித்தால்! 188. இப்போது அவருடைய மாம்சபிரகாரமான சரீரத்தால் (corporal body) அதைச் செய்ய முடியாது. அது வரும்போது, காலம் முடிந்துவிட்டிருக்கும். "மின்னலானது கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்." ஆனால் அவருடைய ஆவி (Spirit)! 189. சபையானது வந்திருக்கிறது, அது எப்படியாக மேலே வந்திருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்; நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினூடாக வந்திருக்கிறது; மேலும் இப்போது சபையை ஆயத்தப்படுத்தும்படியாக, சரியாக எடுத்துக் கொள்ளபடுதலின் காலத்திற்குள் வந்திருக்கிறது. அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டபடியே துல்லியமாக, சபை காலங்களானது வரிசைப்படுத்தப்பட்ட விதமாகவே, நாம் அதை பார்த்திருக்கிறோம், எல்லாமே சரியாக வந்திருக்கிறது, சரியாக வந்திருக்கிறது. 190. வேதவாக்கியத்தின்படி, பெந்தெகொஸ்தே தான் கடைசி ஸ்தாபனம். மற்ற எல்லாவற்றுடனும் ஸ்தாபனமாக சேர்த்து நிராகரிக்கப்படுகிற கடைசி ஸ்தாபனம் அது தான். அது சரி. எந்த ஸ்தாபனமும் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அது ஒரு... தனிப்பட்ட நபர்கள் தான் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். 191. இப்போது அவருடைய பிரசன்னத்தை உங்களால் விசுவாசிக்க முடியவில்லையா? இப்போது இங்கே, நான் வெறும் உங்கள் சகோதரன் மாத்திரமே, இப்போது அனுப்பப்பட்டிருகிறேன், அதாவது வந்து இதை செய்யும் படியாக தேவன் என்னிடம் கூறினார். ஆகையால், நான் அவரை விசுவாசிக்கிறேன். இந்த காலத்திற்கென்று, அது வார்த்தையில் எழுதப்படாமல் இருந்திருந்தால், நான் அதை விட்டுவிட்டு தூரமாக விலகி சென்றிருந்திருப்பேன். அந்த வார்த்தையில் இல்லாத எதையுமே விசுவாசிப்பதில்லை. நான் - நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதை நான் விசுவாசிக்க மாட்டேன் என்று சொல்லமாட்டேன், ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்னால் அதை புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் அது இந்த வார்த்தையில் இருக்கும்போது, மேலும் இந்த காலத்திற்கான வாக்குத்தத்தமாயிருக்கும்போது, நான் அதை புரிந்துகொள்கிறேன். உங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறதா? இப்போது கர்த்தர் தாமே நமக்கு உதவுவாராக. நீங்கள் சற்றே...விசுவாசத்தினால் இப்போது நீங்கள் கிட்டிச் சேருங்கள், அதை விசுவாசியுங்கள்... நம்முடைய பிரசன்னத்தில்... இல்லை மாறாக நாம் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறோம், இப்போது, அந்த வாக்குத்தத்தத்தை பண்ணின அந்த மாறாத இயேசு. 192. வேதாகமத்தில் இங்கே, தேவஆவியின் ஏவுதலை (inspired) அடைந்திருந்த பவுல், அவன் தளர்ச்சிக்குளாகும் அளவுக்கு அவ்வளவு மிகுதியான வெளிப்பாட்டின் மேன்மையை பெற்றிருந்தான், "அவனுக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் அவன் தன்னை உயர்த்தாதபடிக்கு, அவனுடைய மாம்சத்திலே தொந்தரவு இருந்தது." பாருங்கள், அவன் வேதாகமத்தை எழுதினான், அவன் தேவஆவியின் ஏவுதலை (inspired) மிகுதியாக பெற்றிருந்தான். அவன் வேதாகமத்தின் புஸ்தகங்களை எழுதினான். மோசேயை போல, அவனும் ஒரு தீர்க்கதரிசி. எனவே அவன், வார்த்தை அவனிடம் வந்தது, அவன் அதை எழுதினான், அது பரிசுத்த எழுத்துகளுக்குள் (sacred Writings), வேதவாக்கியங்களுக்குள் அனுமதிக்கப்பட்டது. இப்போது அதை - அதை - அதை கூறுகிறவன் அவன்தான்... இதை விசுவாசிக்கிறவன், இந்த காரியங்களை போதித்தவன். 193. இப்பொழுது, கிறிஸ்து உயிர்த்தெழுந்து, நம் மத்தியில் இருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்து நம் மத்தியில் இருக்கிறார் என்பதை உங்கள் சிந்தையில் பதியவைத்துக் கொள்ளுங்கள். 194. இப்போது, நாம் எல்லாவிதமான பெரிய அசைவுகளை யும், ஆர்ப்பரிப்புகளையும் தேவனை துதிப்பதையும் நாம் கண்டிருக்கிறோம்; எல்லாம் சரி. நாம் அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசனங்கள் உரைத்தோம், மற்றும் எல்லாமே. நாம் அவை எல்லாவற்றையும் கண்டிருக்கிறோம். அது நல்லதுதான். அது அதோடு கூட வருகிறது. 195. ஆனால், நினைவில்கொள்ளுங்கள், அவருடைய தெய் வீக பிரசன்னம், அந்த வார்த்தைதாமே கடைசியானதா யிருக்கிறது. அவர் வார்த்தையாயிருக்கிறார். அந்த தலையா கிய அந்த வார்த்தை, அது சரீரத்திற்கு வருகிறது. பாருங்கள்? பின்பு எபிரெயர் 4-ம் அதிகாரத்தில், அந்த வார்த்தை கூறுகிறது, "தேவனுடைய வார்த்தையானது கருக்கான தாயும், இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை விட மிகவும் வல்லமையுள்ளதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." இப்போது அந்த வேதவாக்கியத்தை எடுத்து, அதை பின்னோக்கி தீர்க்கதரிசிகளின் தொடக்கத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து இயேசு கிறிஸ்து வரை பொறுத்திப் பார்த்து, அது மாறாமல் அப்படியே இருந்ததா, அப்படியே இருந்ததா, அதாவது அவர் அந்த மேசியா என்று அறியப் பட்டாரா என்று பாருங்கள். 196. இப்போது இங்கேயிருக்கும் ஏதோ ஒரு மனிதன் அந்த மேசியா அல்ல. பரிசுத்த ஆவியானவர்தான் அந்த மேசியா. கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் ஒன்றே, எனவே இங்கே, அது இப்போது இங்கேயிருந்து மாம்சத்தில் கிரியை செய்து, எடுத்துக்கொள்ளப்படுதலின் கிருபைக்கென்று (rapturing grace) சரீரத்தை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது. நண்பர்களே, அதை விசுவாசியுங்கள். தேவனாகிய கர்த்தாவே, இன்றிரவு அது நடக்க தயவுசெய்து அனுமதியும். 197. இப்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், தேவனுடைய மகிமைக்கென்று, நான் ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்கிறேன். அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பதற்காக நான் அதை கூறுகிறேன். பாருங்கள், நீங்கள்... 198. நீங்கள் சந்தேகித்துக்கொண்டிருந்தால், நீங்கள் - நீங்கள், அதிக நேரம் இருப்பது நல்லதல்ல, 'ஏனெனில், சந்தேகத்தி ற்கு இடமில்லாமல், சில நேரங்களில் அவிசுவாசிகளுக்கு என்ன நடக்கும் என்பதை இங்கே உட்கார்ந்து இருக்கிற அநேக ஜனங்கள் கண்டிருக்கிறார்கள். வேதாகமத்தில் நடந்தது போல, அது ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு சென்று விடும். 199. நான் ஒரு அந்நியன் என்பதை, உங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்தவர்களாய், இங்கே இருப்பவர்களில் எத்தனை பேர் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள், ஜெபித்துக்கொண்டிருப்பவர்களே, ஆகவே எனக்கு உங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 200. நீங்கள், கருப்பு நிற டையை அணிந்து, சரியாக அங்கே உட்கார்ந்து, என்னை பார்த்துக்கொண்டிருப்பவரே. 201. இப்போது உற்றுப்பாருங்கள். அந்த வெளிச்சத்தை பார்க்கிறீர்களா? உங்களால் அதை பார்க்க முடியவில்லையா? சற்றே செம்மஞ்சளான (amber), பொன்நிற- பச்சையான (goldish-green) வெளிச்சம் இங்கிருப்பதை. 202. ஐயா, என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, உங்கள் முழு இருதயத் தோடும் நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா, அது தேவன் என்பதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் அதை செய்வீர்களா? உங்களுக்கான சுகமளித்தல் வரும் என்பதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? உங்களிடம் ஜெப அட்டையிருக்கிறதா? இல்லை, உங்களிடம் அது இல்லையா. உங்களுக்கு அது தேவையே இல்லை. உங்களுடைய பிரச்சனை உங்கள் காதில் இருக்கிறது. அது சரியென்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். அது உங்கள் காதில் இருந்தது; நீங்கள் அதை விசுவாசித்தால், இப்போது அது இல்லை. நான் அந்த மனிதனை அறியேன், ஒருபோதும் அவரை கண்டதில்லை. 203. இப்போது இங்கே ஒரு மனிதன் சரியாக உங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அவர் ஒருவிதத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் கோளாறாக இருக்கும் ஏதோவொன்றிற்காக அவர் ஜெபித்துக்கொண்டி ருக்கிறார். ஐயா, என்னை பாருங்கள். உங்களிடம் ஜெப அட்டையிருக்கிறதா? [அந்த சகோதரன், "இல்லை" என்று கூறுகிறார்] உங்களிடம் இல்லை. என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?["ஆம்."] நான் உங்களிடம் என்ன கூறினேனோ அதை சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ["ஆம், ஐயா."] அது இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாயிருக்கிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ["ஆம், ஐயா.") சரியாக இப்போதிலிருந்து உங்களுடைய முதுகு நன்றாக இருக்கப்போகிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். நீங்கள் விசுவாசித்தால்! பாருங்கள்? 204. இப்போது அந்த மனிதனை கேட்டுப்பாருங்கள். அவரை என் ஜீவியத்தில் நான் கண்டதே இல்லை. அவர் என்னை தொடவே இல்லை. என்னிலிருந்து இருபது அடி தூரத்திலிருக்கிறார். அவர் எதை தொட்டார்? அது வேதவாக்கியத்தை நிறைவேற்றுகிறது. அவர் பிரதான ஆசாரியரை தொட்டார். அவர் அங்கே உட்கார்ந்து, குணமடைய வேண்டுமென ஜெபித்துக் கொண்டிருந்தார். பாருங்கள், நம்முடைய பலவீனமான உணர்வுகளால் தொடக்கூடிய பிரதான ஆசாரியரை அவர் தொட்டார். பாருங்கள்? 205. இப்போது, அங்கே பின்னாடி உட்கார்ந்து இருக்கும் வாலிபனே, நீ என்ன நினைக்கிறாய், என்னை அப்படியே நேராக பார்த்துக்கொண்டிருக்கும் வாலிபனே? உனக்கு இருக்கும் அந்த சிறுநீரக (kidney) பிரச்சனையை தேவன் சுகமாக்கிவிட்டார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசித்தால், உன் கையை உ உயர்த்து. உனக்கு இருக்கும் அந்த பழக்கத்தையும் நீ நிறுத்த விரும்புகிறாயா, அந்த சிகரெட்டுகளை தூக்கி வீச விரும்புகிறாயா? நீ விரும்பினால் உன் கையை இப்படியாக அசை. அப்படியானால் அதை கீழே போட்டுவிட்டு, அதை மறந்துவிடு. இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்கி விட்டார். உன்னால் விசுவாசிக்க கூடுமானால்! 206. சரியாக உனக்கு முன்பாக, கண்ணாடியை அணிந்தபடி ஒரு சீமாட்டி உட்கார்ந்து இருக்கிறாள். அவள் நரம்பு கோளாறால் அவதிப்படுகிறாள். சீமாட்டியே, தேவன் உங்களை சுகமாக்குவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர் களா? அதை நீங்கள் விசுவாசித்தால் உங்கள் கையை உயர்த்துங்கள். எல்லாம் சரி. 207. நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? உங்களுக்கு பக்கத்தில் ஒரு சிறு சீமாட்டி உட்கார்ந்து இருக்கிறாள், அவள் பெண்களுக்கான பிரச்சனையால் அவதிப் படுகிறாள், சீமாட்டிகளுக்கான கோளாறால். சீமாட்டியே, அது சரி. அது உண்மையென்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். கசிவு (Drainage). அவள் சுகமடையும்படி, அவள் மீது உங்கள் கையை வையுங்கள், 'ஏனெனில் அவள் விசுவாசிக்கிறாள். 208. சொல்லலாம், அடுத்து அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந் திருப்பவள், ஒன்று, இரண்டு, அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் அந்த சீமாட்டி மீது அது இருக்கிறது. அவளின் கால்களால் அவளுக்கு தொந்தரவு இருக்கிறது, அவளுடைய கால்களில் பிரச்சனை. உங்கள் கால்களை தேவன் சுகமாக்குவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். அங்கேயிருக்கிறீர்கள். பாருங்கள்? 209. அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 210. அங்கே உட்கார்ந்திருப்பவரே, நீங்கள் விசுவாசிக்கிறீர் களா? இங்கே முன்னாடி உட்கார்ந்து இருக்கும் இந்த மனிதனுக்கு சரியாக பின்பாக, உட்கார்ந்து இருக்கும் சீமாட்டியே? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா தேவன்... இரண்டு அபாயகரமானவைகள் உங்களுக்கு இருக்கிறது. அவற்றில் ஒன்று புற்று நோய்; இன்னொன்று, கீல்வாதம் (arthritis). தேவன் உங்களை சுகமாக்குவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், உங்கள் கையை உயர்த்தி, "நான் - நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். எல்லாம் சரி, விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் உடன்படிக் கையை உறுதிப்படுத்துகிறார். 211. சரியாக இந்த மனிதனுக்கு பின்பாக உட்கார்ந்து இருக்கும் இந்த சீமாட்டி என்னை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ஒருவிதத்தில் பார்ப்பதற்கு சிகப்பு நிறம் போன்ற உடையை அணிந்திருக்கிறாள். சிகப்பு, சரியாக இங்கே; அநேகமாக, அது ஒரு ஸ்வெட்டர். அவள் மிகவும் தூரத்திலிருக்கிறாள்; அங்கே அது மங்கலாக இருக்கிறது. பிறகு, பாருங்கள், அது உங்களை மிகவும் பலவீனமடைய செய்கிறது, அறை முழுவதும் அப்படியே எல்லாமே பால் வண்ண நிறமாக (milky color) மாற ஆரம்பிக்கிறது. 212. எது, அது அங்கே சரியாக அவள் மீது நிற்கிறது. அந்த வெளிச்சத்தை பார்க்கிறீர்களா? அவள் ஏதோவொன்றை குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் எதற்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை இயேசு கிறிஸ்து எனக்கு வெளிப்படுத்தினால், உங்கள் முழு இருதயத் தோடும் நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களா? நான் உங்களுக்கு அந்நியனாயிருக்கிறேன், நீங்களும் எனக்கு அந்நியரா யிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த பிரதான ஆசாரியரோடு தொடர்பில் வந்துவிட்டீர்கள், 'ஏனெனில் அவர் எனக்கு கொடுக்கும் சமிக்ஞை (signal) சரியாக உங்கள் மீது இருக்கிறது, பாருங்கள், பாருங்கள், அந்த அடையாளம். அது இருக்கிறது என்பதை நான் அறிவேன். 213. உங்களுக்கு மிகமிக மோசமான நரம்புசார்ந்த கோளாறு இருக்கிறது அதினால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள். அது மட்டுமல்ல உங்களுக்கு தொண்டையில் முன்கழுத்து கட்டியிருக்கிறது (goiter), அதினாலும் நீங்கள் அவதிப் படுகிறீர்கள். அது சரியென்றால், உங்கள் கையை நீங்கள் உயர்த்துங்கள். "அதை உங்களால் பார்க்க முடிகிறது" என்று நீங்கள் கூறுகிறீர்கள் 214. எல்லாம் சரி, நீங்கள் வரு... நீங்கள் இந்த ஊரை சேர்ந்தவரல்ல. நீங்கள் வரு... நீங்கள் இங்கேயிருக்கும் இந்த இடத்தை, இந்த ஊரை சேர்ந்தவரல்ல. நீங்கள் மெம்பிஸிலிருந்து வருகிறீர்கள். அது சரி, 215. உங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சீமாட்டி, அவளும் மெம்பிஸிலிருந்து வருகிறாள். சீமாட்டியே, உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர் களா? தேவனால் உங்களை சுகமாக்க முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது ஜனங்களை இடறலடையச் செய்துவிடுகிறது, பாருங்கள். என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதை பேசிக்கொண்டிருக்கிறவர் தேவன்தான் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியானால் அது தேவனாகதான் இருக்கும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்லாம் சரி. உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசியுங்கள். இருக்கிறது, நீங்கள் எதினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு உங்களுக்கு உங்களுடைய தொண்டையிலும் பிரச்சனை இருக்கிறது. இன்னொரு காரியம், உங்களுடைய பக்கவாட் டில் உங்களுக்கு ஒரு முடிச்சி (knot), ஒரு கட்டியுமிருக்கிறது (growth). அது எந்த பக்க பக்கவாட்டில் என்பதை தேவனால் என்னிடம் கூற முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர் களா? அது உண்மையென்றால், நான் உண்மையை கூறினால் உங்கள் கையை உயர்த்துங்கள். அது வலப் பக்கத்திலிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? நீங்கள் யார் என்பதை தேவனால் என்னிடம் கூற முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுக்கு உதவுமா? நீங்கள திருமதி. காக்ஸ். அது சரி. பாருங்கள்? திரும்ப செல்லுங்கள், பாருங்கள். 216. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எல்லாரும் இப்போது விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், அதுதான் ஆபிரகாமின் வித்துக்கான உடன்படிக்கையின் உறுதிப்பாடாயிருக்கிறது, உங்களால் விசுவாசிக்க முடிந்தால்! பாருங்கள்? 217. இங்கே, இங்கே ஒரு சிறு பெண்தூக்குப் படுக்கையில் படுத்திருக்கிறாள். சீமாட்டியே, நான் பேசுவதை உங்களால் கேட்க முடிகிறதா, அந்த தூக்குப்படுக்கையில் படுத்திருப்பவரே? ஆம். என்னால் உங்களை சுகப்படுத்த முடியாது. உங்களை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது; நீங்கள் எனக்கு வெறும் ஒரு அந்நியரே. ஆனால் உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை இயேசு கிறிஸ்துவால் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர் களா? அது உங்களுக்கு உதவி செய்யுமா? செய்யுமா, அது உதவி செய்யுமா? நீங்கள் அங்கே படுத்திருந்தால், நீங்கள் மரித்துவிடுவீர்கள். நீங்கள் ஜீவிப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது, அது கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதே. உங்களுக்கு புற்று நோய் இருக்கிறது. அது சரி. தேவன் இப்போது உங்களை குணமாக்குவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை நீங்கள் விசுவாசித்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். எல்லாம் சரி. உங்களுடைய இடத்தில், உங்களால் செய்ய முடிந்த ஒரே காரியம் என்னவென்றால், ஆபிரகாமின் வித்தாக, தேவனில் இருக்கும் உங்களுடைய விசுவாசத்தை உரிமைகோரி அந்த படுக்கையை விட்டு எழுந்திருந்து; நீங்கள் எதின் மேல் படுத்திருந்தீர்களோ அதை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு செல்வதே. இயேசுவின் நாமத்தில் எழுந்திருங்கள். பாருங்கள், தேவனில் தன்னுடைய வாக்குத்தத்தத்தை எடுத்துக்கொள்ளும்படி அவள் எழுகிறாள். 218. ஏனையோரில் எத்தனை பேர் அதை உங்கள் முழு இருதயத்தோடும் இப்போது விசுவாசிக்கிறீர்கள்? 219. எழுந்திருங்கள். உங்களுக்கு பெலனிருக்கிறது; தேவன் உங்களுக்கு பலத்தை தருவார். உங்கள் காலூன்றி நில்லுங்கள். அதோ அங்கே அவள் தூக்குப்படுக்கையை விட்டுவிட்டு, எழுந்து நிற்கிறாள். 220. இப்போது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்பும் ஏனையோர் எல்லாரும், உங்கள் காலூன்றி நில்லுங்கள். உங்கள் காலூன்றி நில்லுங்கள். எழுந்து நில்லுங்கள், எல்லாவிடங்களிலும், இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளுங்கள். 221. கர்த்தராகிய இயேசுவே, அவர்களில் ஒவ்வொருவரையும் சுகமாக்கும். கர்த்தாவே, அதை அருளும். யேகோவா-யீரே 2